மின்வாரியத்தில், 56,758 பணியிடங்கள் காலியாக இருப்பதால், மின் இணைப்பு பராமரிப்பு, மின் கணக்கீடு, மீட்டர்களில் ஏற்படும் பழுதுகளை கவனிப்பது, டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு போன்ற பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், எதிர்காலத்தில் உபரி மின்சாரம் இருந்தாலும் கூட, அதை முறையாக வினியோகித்து, பராமரிப்பதில் பல குளறுபடிகள் ஏற்படும்.ஆட்கள் இல்லைதமிழகம் முழுவதும், 2.31 கோடி மின் இணைப்புகள் உள்ளன. 63 ஆயிரத்து 956 கிராமங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயம், நெசவு, கோவில் என, 19 லட்சம் மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போதுள்ள மின் இணைப்புகளை சரியாக, முறையாக பராமரிக்கவே ஆட்கள் இல்லாமல், மின்வாரியம் தடுமாறி வருகிறது.காலியிடங்கள்மின்வாரியத்தில் தற்போது, 25 ஆயிரம் உதவியாளர் பணிஇடங்கள், கணக்கீட்டு பிரிவில், 3,500 பணியிடங்கள், 2,000 உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப பிரிவில், 4,000 பணியிடங்கள், நிர்வாக பிரிவில், 500 பணியிடங்கள், அலுவலக கணக்கீட்டு பிரிவில், 500 பணியிடங்கள் உட்பட மொத்தம், 56,758 பணியிடங்கள் காலியாக உள்ளன.கடந்த, 2011ம் ஆண்டு மே மாதம், அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 38,340 ஆக இருக்க வேண்டும். ஆனால், தற்போது, 81,582 பேர் மட்டுமே மின்வாரியத்தில் பணிபுரிகின்றனர். இதனால், ஒட்டுமொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மட்டும், 56,758 ஆக உள்ளது. மேலும், இந்த ஆண்டு குறைந்தபட்சம், 3,000 பேர் வரை ஓய்வு பெறவுள்ளனர்.காலிப் பணியிடங்கள் குறித்து, மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2009ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, 10 லட்சம் யூனிட் மின்சாரம் வினியோகம் செய்து, அதை பராமரிக்க, 1.34 சதவீதம் ஆட்கள் தேவை. ஆனால், தற்போது, 1.05 சதவீதம் ஆட்கள் மட்டுமே உள்ளனர். அதாவது, 1,500 மின் இணைப்புகளை பராமரிக்க, ஒரு ஒயர்மேன், ஒரு உதவியாளர் தேவை. ஆனால், இந்த பதவிகள் பெரும்பாலும் காலியாகவே உள்ளன.
டிரான்ஸ்பார்மர்கள் பழுதுதமிழகம் முழுவதும், 2 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இந்த டிரான்ஸ்பார்மர்களின் உபயோகத்துக்கேற்ப அவ்வப்போது, மசகு எண்ணெய் மாற்றம் செய்ய வேண்டும். அப்போது தான், அதில் அடிக்கடி பழுதுகள் ஏற்படாது. நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும்.
மக்களே மக்களுக்கு...ஆனால், தற்போது போதிய அளவில் ஆட்கள் இல்லாததால், டிரான்ஸ்பார்மர்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால், ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி விட்டன. புதிய டிரான்ஸ்பார்மர்கள் தேவை அதிகரித்து உள்ளது.மேலும், பல நகரங்கள், கிராமங்களில் டிரான்ஸ்பார்மரை, "ஆன்' செய்வது, "ஆப்' செய்வது, தெரு விளக்குகளை போட்டுக் கொள்வது போன்ற வேலைகளை அந்தந்த பகுதி மக்களே செய்கின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அப்போது அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டி வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.பழைய தொகையே மாதா, மாதம் வசூல்மின்சார கணக்கீட்டு பிரிவில், 3,500 பணியிடங்கள் காலியாக இருப்பதால், பல பகுதிகளிலும் சரியாக மின்சாரம் கணக்கீடு செய்யப்படுவது இல்லை. முந்தைய மாதங்களில் வசூல் செய்யப்பட்ட பில் தொகையே, அடுத்த மாதமும் வசூல் செய்யப்படுகிறது. மேலும், மீட்டர்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வது, புதிய மீட்டர்களை பொருத்துவது போன்ற பணிகளை கவனிக்கவும் ஆட்கள் இல்லை.கடந்த, 2009ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் புதிய ஊழியர்கள் நியமனம் பெரிய அளவில் செய்யப்படவில்லை. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்கள் மட்டுமே, அவ்வப்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment