மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.-

மே 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து மே 2013 வரை 8.97 புள்ளிகள் அதிகரித்து 88.97ஆக உள்ளது. அதேபோல் வருகிற ஜூன் மாதத்திற்கான விலை ஏற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் AICPIN புள்ளிகள் 10-ற்கும் அதிகமாக 90.00 கடக்க வாய்ப்புகள் உள்ளதால், ஜூலை

மாதத்திற்கான அகவிலைப்படி 10% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2013 முதல் உயர்த்தக்கூடும். மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும். அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.

No comments: