நெய்வேலி தொழிலாளருக்கு முழு ஆதரவு: ஏ.ஐ.டி.யூ.சி., மின்வாரிய தொழிலாளர் சங்கம் முடிவு


கும்பகோணம்: "மத்திய அரசு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பது என்ற முடிவை வாபஸ் பெறவேண்டும் என்றும், இதற்கு எதிராக போராடும் நெய்வேலி தொழிலாளர்களுக்கு பேரவை முழு ஆதரவை அளிப்பது' என ஏ.ஐ.டி.யூ.சி., மின்வாரிய தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஏ.ஐ.டி.யூ.சி., மின்வாரிய தொழிலாளர் சங்கத்தின் 30வது ஆண்டு பேரவை கூட்டம் கும்பகோணம் ஹோட்டல் செல்லா கூட்ட அரங்கில் ஏ.எம்.கோபு நினைவு அரங்கில் நடந்தது.கூட்டத்திற்கு சங்கத்தின் துø ணத்தலைவர் விஜயபால் தø லமை வகித்தார். நிர்வாகிகள் தண்டாயுதபாணி, கண்ணன், சுந்தரேசன், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச்செயலாளர் தில்லைவனம் அறி க்கை சமர்பித்தார். ராஜகோபால் வரவேற்றார். இதில், மாவட்ட மூத்ததலைவர் சந்தானம் உள்ளிட்ட பலர் பேசினர். இணைச்செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:மத்திய அரசு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பது என்ற முடிவை வாபஸ் பெறவேண்டும். இதற்கு எதிராக போராடும் நெய்வேலி தொழிலாளர்களுக்கு பேரவை முழு ஆதரவை அளிப்பது என முடிவு செய்துள்ளது.மின்சாரம் சட்டம் 2003ஐ ரத்து செய்யவேண்டும். மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மின்உற்பத்தியை பெருக்கிட வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை புதிய தொழில் நுட்பத்துடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கல்பாக்கம், நெய்வேலி மின் திட்டங்களில் உற்பத்தியாவும் மின்சாரம் முழுவதையும் தமிழக பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஊதிய உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த தமிழக அரசையும், வாரியத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.அடிப்படை ஊதியத்தில் 50 சதவீத ஊதிய உயர்வு வழங்கவேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தி ஓய்வூதிய திட்டத்தை உத்திரவாதப்படுத்தவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும்.

மின்சார வாரியத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல்1ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.வாரிய ஆணைகள் அனைத்தும் தமிழிலேயே வெளியிட வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து அலுவலகங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.மின்கட்டண வசூல் பணிக்கு கணக்கீட்டு ஆய்வாளர்களை பயன்படுத்துவதை கைவிடவேண்டும். விநியோக பிரிவு தொழிலாளர்களை கட்டுமானப்பணிக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடன் நிறுத்தவேண்டும். மாநில அரசு அதை நிர்ப்பந்திக்க வேண்டும் என்பது உள்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click