மின் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடம் ! என மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளது.

மின் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடம் !

நடப்பு நிதியாண்டில் நாட்டிலேயே அதிக மின் பற்றாக்குறையை சந்தித்த மாநிலமாக தமிழகம் திகழும் என மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளது.

மின் பாதை இழப்புகள், உற்பத்திக் குறைவு, மின் வாரியங்களின் நிதி நிலை மோசமாக இருப்பது உள்ளி்ட்டவையே மின் பற்றாக்குறை ஏற்பட காரணம் என மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளது.

பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிஷா ஆகிய கிழக்கு மாநிலங்களிலும் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் அடங்கிய மேற்கு மாநிலங்களிலும் உபரி மின்சாரம் கிடைக்கும் நிலை உள்ளது என மின்சார ஆணைய புள்ளிவிவரம் கூறுகிறது. எனினும் வட மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை நிலவுகிறது என அந்த ஆணையம் கூறியுள்ளது.

www.puthiyathalaimurai.tv

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click