ஏழு ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம்; தமிழகத்தில் முதல் முறையாக சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவக்கம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, ஒலப்பாளையத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் “டாடா பவர்” நிறுவனங்களின் சார்பில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் தனது செயல்பாட்டை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

 இதன் துவக்க விழாவில் பங்கேற்று, டாடா சோலார் பவர் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் பி.அருள்குமார் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசும்போது, தமிழகத்தின் மின் தேவை மிக அதிகமாக உள்ளது. தற்போது நிலக்கரியின் மூலமே 80 சதவீத அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் நிலக்கரி போன்ற கனிம வளங்கள் பூமியில் குறைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று வழியில் மின் சக்தியை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.


இதனால் என்றும் நிரந்தரமாக கிடைக்க கூடிய சூரிய ஒளி மூலம் மின் ஆற்றலைப் பெற தமிழக, மத்திய அரசுகள பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் முயற்சியாக “டாடா சோலார் பவர்” நிறுவனமும், சென்னை சில்க்ஸ் நிறுவனமும் இணைந்து காங்கயம் அருகே, ஓலைப்பாளையத்தில் ரூ.16 கோடி முதலீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தியை துவக்கியுள்ளோம்.

இந்த சோலார் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் தினசரி 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும்.

30 ஆண்டுகளுக்கு முன் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு யூனிட் ஒன்றுக்கு ரூ.800 செலவானது. தற்போது நவீன வளர்ச்சியால் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.7 மட்டுமே செலவாகிறது. எதிர் காலத்தில் உற்பத்தி செலவு இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள பொருளாதார முதலீடு அடுத்த 6 ஆண்டுகளில் முளுமையாக திரும்பக் கிடைந்து விடும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த உற்பத்தி நிலையம் நல்ல நிலையில் இயங்கும் வரையில் அமைக்கப்பட்டுள்ளது என்றார். 


No comments: