மின்வாரியத்தில் பணியாளர்கள் தேர்வு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு வெளியீடு


விழுப்புரம்:தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 951 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர் நியமிக்கப்பட உள்ளனர்.

விழுப்புரம் கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அலுவலக பரிந்துரையின் பேரில் நியமிக்க உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.பணியிடங்களுக்கான தகுதியான பதிவுதாரர்கள் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் இணையதளம் மூலம் பட்டியல் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. உரிய கல்வித் தகுதியுடைய பதிவு தாரர்களின் பட்டியல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப் பட்டுள்ளது.

காலி பணியிட விபரம்:
டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (காலியிடம் :822), டிப்ளமா இன் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (காலியிடம் : 45), டிப்ளமா இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (காலியிடம் : 48), டிப்ளமா இன் இன்ஸ்ட்ருமென்ட் அண்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங் ( காலியிடம் : 18), டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி ( காலியிடம் : 18).

இக்காலியிடத்திற்கான கல்வித் தகுதி, மேற்காணும் பட்டயங்களில் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு இதர வகுப்பினருக்கு 1.7.2013 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற வகுப்பினருக்கு உச்சவயது வரம்பில் சலுகை உண்டு.
தகுதியுள்ள அனைத்து பதிவுதாரர்களும் வரும் 20ம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதை நேரில் வந்து உறுதி செய்து கொள்ளலாம்.

திருநெல்வேலி : மின் வாரியத்தில் 951 பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக தலைமை இன்ஜினியரால் தொழில் நுட்ப உதவியாளர் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் உட்ப பணிக் காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவுதாரர்களின் பட்டியல் கோரப்படுகிறது. தொழில் நுட்ப உதவியாளர் (எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்) 822 பணியிடங்கள், தொழில் நுட்ப உதவியாளர் (எலக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) 45 பணியிடங்கள், தொழில் நுட்ப உதவியாளர் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) 48 பணியிடங்கள், தொழில் உட்ப உதவியாளர் (இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங்) 18 பணியிடங்கள், தொழில் நுட்ப உதவியாளர் (கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் இன்பர்மேஷன் டெக்னாலஜி) 18 பணியிடங்கள் நிரப்பபடுகிறது. தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றுகள், சாதி சான்று, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் 21ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுக வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click