ஆசியாவில் மின்கட்டணம் அதிகமுள்ளநாடுகளில் இலங்கை முதலிடம்

news
ஆசியாவிலேயே அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது.

அதன்படி கடந்த மாதத்திலிருந்து மின்சாரக் கட்டணத்திற்கான வரி 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அதிகரிப்பினால் 60 வீதத்தற்கு மேல் பயன்படுத்தும் பாவனையாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த அதிகரிப்பானது லண்டனின் மின் கட்டணத்தைப்போல இரண்டு மடங்காகும்.

இலங்கையில் ஒரு கிலோவாற் மின்கட்டணம் ரூபா 47 ஆல் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் இலங்கையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் மூன்றில் இரண்டு பகுதியானது நிலக்கரி அல்லது எரிபொருளைப் பயன்படுத்திப் பெறப்படுகிறது. ஏனையவை நீர் மின்நிலையங்களாகும்.

ஆனால் வறட்சி நிலவும் காலங்களில் அவற்றிலிருந்து நீர் மின்சக்தியைப் பெறமுடியாது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் இலங்கை மின்சார சபை 2013 ஆம் ஆண்டில் மின்சார உற்பத்தியில் 750 அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மே மாதத்திலிருந்து வரிவீதம் அதிகரிப்பதால் மின்சாரக் கட்டணத்தில் 225 மில்லியன் டொலர்கள் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்கட்டணப் பற்றுச்சீட்டைப் பார்த்த அதிர்ச்சியில் ஒருவர் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: