கோவை ; மின் கட்டணம் இனி எஸ்எம்எஸ்-ல் வரும் ( தினகரன் செய்தி )


கோவை: மின் கட்டணம் தொடர்பான தகவல்கள் இனி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என மின் மேற்பார்வை பெறியாளர் தெரிவித்துள்ளார்.
 தற்போது  மின் கட்டணம் மீட்டர் அளவு எடுத்த நாளில் இருந்து 20 நாட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதன் பிறகும் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார மீட்டரில்  உபயோகித்த மின் அளவுகள் குறிக்கப்படும். தற்போது இந்த திட்டத்தையும் மின் பகிர்மான கழகம்  பயனாளிகளுக்கு மிகவும் எளிமையாக்கி உள்ளது. 

மின்தடை மற்றும் மின் கட்டணம் செலுத்த இறுதி நாள் போன்ற தகவல்களை  நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் நேரடியாக பயனீட்டாளர்கள் அனைவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படவுள்ளது. எனவே மின் கட்டணம் செலுத்தும் போது மின் உபயோகிப்பாளரின் அலைபேசி எண்ணை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் தவறாது தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை கோவை மின் பகிர்மான வட்டம் தெற்கு மேற்பார்வைபொறியாளர் மணி தெரிவித்துள்ளார்.

No comments: