மேட்டூர்: மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஏற்கனவே 4 யூனிட் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடக்கிறது. மின் உற்பத்தியை அதிகரிக்க, புதியதாக ரூ3500 கோடி ரூபாய் செலவில் 100 ஏக்கர் பரப்பளவில் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கான புதிய யூனிட் அமைக்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சோதனை முயற்சியாக மின் உற்பத்தி நடக்கிறது. புதிய அனல் மின்நிலையத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்பு சோதனை மின் உற்பத்தி நடத்தப்பட்டது. அப்போது ஆயில் கசிவு ஏற்பட்டதால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் சோதனை முயற்சிக்கான மின் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம் தற்போது 320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதை படிப்படியாக 600 மெகாவாட் வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய யூனிட் முழுமையாக செயல்பட தொடங்கினால், தற்போது நிலவி வரும் மின்வெட்டு குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment