வட சென்னையில் மின் உற்பத்தி மே மாதம் துவக்கம் தினகரன் செய்தி

சென்னை: வடசென்னை மின் உற்பத்தி 600 மெகா வாட் அலகு வரும் மே மாதம் முதல் உற்பத்தியை தொடங்கும். வல்லூர் மின் உற்பத்தி திட்டத்தில் 3 வது 500 மெகாவாட் அலகு வரும் அக்டோபரில் செயல்படத் தொடங்கும். தூத்துக்குடியில் அமைக்கப்படும் மின் திட்டத்தில் 500 மெகா வாட் திறன் கொண்ட 2 அலகுகள் 2013 டிசம்பர், 2014 மார்ச்சில் உற்பத்தியை தொடங்கும். எண்ணூர் சிறப்பு பொருளார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டப்பணி 2013&2014ம் ஆண்டில் தொடங்கும். உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி பிரிவு திட்டப்பணிகளும் வரும் நிதி ஆண்டில் துவங்கும்.

No comments: