வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?


 வருமான வரி தாக்கல் செய்யத் தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பார்ப்போம்.
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் செய்பவர்கள் கீழ்கண்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். எனினும் இது அவர்கள் பெறும் வருமானம் மற்றும் விதிக்கப்பட்டிருக்கும் வரிக்கு ஏற்ப மாறுபடுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
1. பான் கார்டு நம்பர்

2. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் ஃபார்ம் 16
3. வங்கி ஸ்டேட்மென்ட்ஸ் அல்லது வங்கி வைப்புத் தொகை வட்டிக்கான பாஸ் புக்
4. வங்கி வைப்புத் தொகை தவிர்த்த வட்டி மூலம் வந்திருக்கும் வருமானத்திற்கான ஸ்டேட்மென்ட்ஸ்
5. வங்கியால் வழங்கப்படும் டிடிஎஸ் சான்றிதழ்
6. பார்ம் 26எஎஸ்
7. 80சி பிரிவு முதலீடு - எல்ஐசி, என்எஸ்சி மற்றும் பிபிஎஃப் ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பவர்கள் 80சி பிரிவின்படி வரி கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள்.
8. சமுதாய சேவையில் ஈடுபவர்கள் தாங்கள் அளித்த நன்கொடைகளுக்கான சான்றிதழை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். 80ஜி பிரிவின் கீழ் இந்த நன்கொடை தொகைக்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
9. வீட்டுக் கடனுக்கு கட்டும் வட்டி. இதன் மூலம் ரூ. 2,50,000 வரை வரியை சேமிக்கலாம்.
பின்வரும் ஆவணங்களும் சில சமயங்களில் தேவைப்படலாம்
1. பங்கு வர்த்தக சான்றிதழ் - பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அதில் வரும் லாபத்திற்கு கேபிடல் கெய்ன்ஸ் என்ற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும்.
2. 80சிசிஎப் பிரிவின் கீழ் முதலீடு - இதன் கீழ் முதலீடு செய்பவர்கள் ரூ.20,000 வரை வரியை சேமிக்க முடியும்.
குடியிருப்பு சொத்துக்கள் மூலம் வருமானம் இருந்தால் கீழ்கண்ட ஆவணங்கள் தேவைப்படும்.
1. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான சான்றிதழ்
2. முனிசிபால் கார்பரேசன் வழங்கும் வரி ரசீது

No comments: