ராட்சத குழாய் உடைந்து வெள்ள பெருக்கு கெத்தை மின் நிலையம் தப்பியது தினகரன் செய்தி

ஊட்டி : ராட்ச குழாய் உடைந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக கெத்த மின்நிலையம் தப்பியது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா மின் உற்பத்தி வட்டத்தின் கீழ் குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், காட்டு குப்பை, சிங்காரா, சிங்காரா புதிய மின் நிலையம், பைக்காரா, முக்குறுத்தி, மரவக்கண்டி ஆகிய நீர் மின் நிலையங்களில் இருந்து 875 மெகா வாட் மின் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கெத்தை மின் நிலையத்தில் 5 இயந்திரங்களை கொண்டு 175 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. இதற்காக குந்தா அணையில் இருந்து பென்ஸ்டாக் பகுதி வரை டனல் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து 5 ராட்சத குழாய்களை கொண்டு மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ராட்சத குழாய்கள் மலைச்சரிவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாயில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் ‘டர்பின்‘ எனப்படும் இயந்திரத்தின் மீது வேகமாக விழச் செய்வதால் டர்பின் சுற்றி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நாள் தோறும் இந்த குழாய்களில் கசிவு ஏற்படுகிறதா என ஊரூ.யர்கள் பராமரிக்க வேண்டும். 



இந்நிலையில், பென்ஸ் டாக் பகுதியில் இருந்து கெத்தை மின் நிலையத்திற்கு செல்லும் மூன்றாவது குழாயில் எக்ஸ்பென்சன் டேங்கில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்களாகவே தண்ணீர் கசிந்துள்ளது. ஆனால் இதனை மின் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. நேற்று இந்த குழாயில் விரிசல் பெரிதாகி தண்ணீரின் அழுத்தம் தாங்க முடியாமல் குழாய் உடைந்து தண்ணீர் ஆறு போல ஓடியுள்ளது. 

இதில் தண்ணீர் சென்ற பாதையில் இருந்த மண் மற்றும் பாறைகள் அடித்து செல்லப்பட்டன. சில நிமிடங்களில் பாறை, மண் மின் நிலையத்தின் மீது விழுந்துள்ளன. இதை கண்ட அதிகாரிகள் மற்றும் ஊரூ.யர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர். அப்போது மின் நிலையத்தை நோக்கி தண்ணீர் பாயந்து வருவதை கண்டு, மின் உற்பத்தியையும் உடனடியாக நிறுத்தியுள்ளனர். 

உடனடியாக ஊரூ.யர்களுக்கு தகவல் கொடுத்து பென்ஸ்டாக் பகுதியில் உள்ள வால்வு அவுசிற்கு சென்று கசிவு ஏற்பட்ட குழாய்க்கு தண்ணீர் செல்லாமல் அடைத்துள்ளனர்.
தற்போது பழுதடைந்த குழாயை சீரமைக்கும் பணியிலும், மின் நிலையம் மீது விழுந்த பாறைகள் மற்றும் சேற்றை அகற்றும் பணியிலும் மின் வாரிய ஊரூ.யர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments: