மின் பாதை கிடைக்காததால் ஜூனில் தான் மின்சாரம் ( தினமலர் )


சென்னை: கோடை காலம் நெருங்குவதால், மின் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரம், மின்பாதை கிடைக்காததால், ஜூன் மாதம் தான் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில், 4,000 முதல் 4,500 மெகா வாட் மின் பற்றாக்குறை உள்ளது. சென்னை தவிர்த்து, பல மாவட்டங்களில், 12 மணி நேரத்திற்கு மேலாக, மின் தடை உள்ளது. பருவ மழையின்மை உள்ளிட்ட பல காரணங்களால், நாளுக்கு நாள் மின் உற்பத்தி குறைந்து வருகிறது. கடந்த மூன்று மாதம், சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், மாநிலத்தின் மின் உற்பத்தி, 10 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது. இதனால், மாவட்டங்களில் அமலில் இருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.


இந்நிலையில், கோடை பருவம் துவங்கியதால், மின் நுகர்வின் அளவு அதிகரித்ததால், மின்வாரியம் கூடுதல் மின்வெட்டை அமல்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. கோடை காலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், நெருக்கடியை சமாளிக்க, மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக, தினசரி மின் நுகர்வின் அளவு உயர்ந்துள்ளது. கோடை பருவத்தை சமாளிக்க, வெளிமாநிலத்தில் இருந்து, 500 மெகா வாட் கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. மின்பாதை பிரச்னையால், வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்த மின்சாரத்தை, தமிழகத்துக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கொள்முதல் செய்த மின்சாரம், வரும் ஜூன் மாதமே, தமிழகத்துக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

ravi said...

Mr.A.S.Bakshi, chair person of CEA told day before yesterday in a press conference that states in south are unable to access additional power from other regions due to grid limitations. He added new grid lines will enable evacuation of 2000MW of power to south states. How can we meet 4500MW shortage in TN alone? A major cause of concern as per him is India needs to import 45Million tons of coal next year to run domestic plants. Hence power crisis will continue even after national grid is connected to South grid.
K.RAVICHANDRAN
COIMBATORE

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click