மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் தெரிவிக்க வசதி

சென்னை:"புதிய மின் இணைப்பு, பழுதான மீட்டர்களை மாற்றுதல் உள்ளிட்ட புகார்களை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களிலேயே தெரிவிக்கலாம்' என, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.மின் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மாவட்டம் மற்றும் மின் வட்ட அளவில், மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் என்ற தனிப்பட்ட அமைப்பு, நிறுவப்பட்டு உள்ளது.புதிய மின் இணைப்பு விண்ணப்பம், இணைப்பு வழங்குவதில் காலதாமதம், பழுதான மின் மீட்டர்களை மாற்றுதல், மின் நுகர்வு பட்டியல் குறித்த புகார், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்கிய மின் இணைப்பு தொடர்பான பிற புகார்கள் போன்றவற்றிற்கு, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தை அணுகலாம்.தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு, மின் வட்டத்திலுள்ள, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம் செயல்படும். இந்த மன்றத்தின் முடிவில் திருப்தியில்லாதோர், மின் நுகர்வோர் குறை தீர் மன்ற ஒழுங்குமுறை விதிகளின் படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகத்தில் உள்ள, மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.பொதுவான முறையீடுகளை, மாநில அளவிலான மின் நுகர்வோர் சங்கத்தால், நேரடியாக மின் குறை தீர்ப்பாளரிடம் தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: