புதிதாக துவக்கப்பட்ட மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 520 மெகாவாட் மின் உற்பத்தி

மேட்டூர்: மேட்டூர் அனல் மின்நிலைய புதிய யூனிட்டில் நேற்று காலை மின் உற்பத்தி 520 மெகாவாட்டை தொட்டது. 600 மெகாவாட் உற்பத்தி இலக்கை எட்ட தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்திக்கு 4 யூனிட்டுகள் உள்ளது. ஒரு யூனிட்டில் 210 மெகாவாட் வீதம் 4 யூனிட்களிலும் தினமும் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், 100 ஏக்கர் பரப்பில் ஸீ3500 கோடி செலவில் 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் முடிந்து கடந்த சில மாதங்களாக புதிய யூனிட்டில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 23ம் தேதி முதல் மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது. முதலில் பர்னஸ் ஆயில் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் நிலக்கரி கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை மின் உற்பத்தி 520 மெகாவாட்டை எட்டியது. விரைவில் 600 மெகா வாட் இலக்கை எட்ட தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொ டர்ந்து 72 மணி நேரம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், சோதனை முடிந்து முறைப் படி மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: