ENERGY DEPARTMENT - Notification of Mandating the use of Aadhaar Authentication Services in Tamil Nadu Generation and Distribution Corporation Limited
குறிப்பு மின் இணைப்பு எண் பெயர் மாற்றம் செய்யாமல் இருப்பவர்கள் காலம் கடத்தாமல் பெயர் மாற்றம் செய்வது நல்லது
யார் யார் ஆதார் எண் இணைப்பது அவசியம்
1) 100 யூனிட் இலவசம் மின்சாரம் பெரும் அனைத்து வீட்டு மின் இணைப்பு TF IA
2) குடிசை மின் இணைப்பு TF IB
3) விவசாயம் மின் இணைப்பு TF IV
4) பொது வழிபாட்டு தளம் TF 2C
5) கை தறி , விசைத்தறி மின் இணைப்பு TF 3A2
இலவச மின்சாரம் பெறுவதில் முறைகேடுகளை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டம் குறித்த தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் 100 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதேபோன்று குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் இலவச மின்சார பயன்பாட்டில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்ணை இணைக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இப்போது இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. அதில், ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும். ஏற்கனவே இது குறித்து மத்திய அரசு அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர், 200 யூனிட் இலவச மின்சாரம் பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆகியோர் அடங்குவார்கள். இதன்படி இவர்கள் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும். மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment