தமிழக பட்ஜெட்: மின்வாரியத்துக்கு ரூ.12,197 கோடி


தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போதுள்ள அரசுக் கட்டடங்களில் சூரிய மின் உற்பத்தி கருவிகளை நிறுவுவதற்காக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயை தனியாக ஒதுக்கீடு செய்து, மொத்தமாக 11.70 கோடி ரூபாய் செலவிடப்படும்.

மின்சார மானியம் 5,197 கோடி ரூபாயையும் சேர்த்து, 2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்திற்காக, மொத்தம் 12,197 கோடி ரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: