500 மெகா வாட் மின்சாரம் வாங்க வாரியம் திட்டம் நிம்மதி : மின்வெட்டில் இருந்து தமிழகம் தப்ப வாய்ப்

சென்னை : "தமிழகத்திற்கு, ஜூன் மாதம் முதல், பிற மாநிலங்களில் இருந்து, கூடுதலாக, 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இது நிரந்தரமாக தொடரும்' என, மின் வாரியம் தெரிவித்து உள்ளது. அனைத்து மின் உற்பத்தி ஆதாரங்களும், தற்போது மின் உற்பத்தியில் ஈடுபடுவதால், தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி, கடந்த ஒரு மாதமாக, 11 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி உள்ளது. எனவே, மின்வெட்டு பிரச்னையில் இருந்து, தமிழகம் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான, "டான்ஜெட்கோ'விற்கு, மரபு மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின் மொத்த மின் உற்பத்தி திறன், 18,514 மெகா வாட். இவற்றில், நீர் மின் திட்டங்கள் மூலம், 2,237 மெகா வாட்; அனல் மின் திட்டங்கள் மூலம், 2,970 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.நீர் மின் திட்டம்நீர் மின் திட்டங்களில் இருந்து, கிடைக்கும் மின்சார அளவு, வறட்சியால் குறைந்தது. தமிழகத்தில், தற்போது, 4,000 முதல், 4,500 மெகா வாட் வரை, மின் பற்றாக்குறை தினமும் நிலவுகிறது.



மின் தடை, வெளி மாநிலங்களில் இருந்து, மின் கொள்முதல் ஆகியவற்றின் மூலம், மின் பற்றாக்குறையை, "டான்ஜெட்கோ' ஈடு செய்கிறது.இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து, தென் மேற்கு பருவ மழை, தீவிரம் அடைந்துள்ளது. பருவ மழையால், தமிழக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. 
நீர் வரத்து அதிகரிப்பால், நீர் மின் உற்பத்தி நிலையங்களில், மீண்டும் மின் உற்பத்தி சூடுபிடித்தது.
காற்றாலைகள்கோடை காலத்திற்கு பின், தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம், தினசரி, 2,500 மெகா வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி அதிகரிப்பால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின் தடை நேரம் குறைக்கப்பட்டது. சில பகுதிகளில் முற்றிலும் தடை நீங்கியது.இத்துடன், மின் வாரியம், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முறையில், மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து, திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம், மின்சாரம் கொள்முதல் செய்கிறது.இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல், பிற மாநிலங்களிலிருந்து, நடுத்தர கால அளவில், 500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில், மின் வாரியம் கையெழுத்திட்டது.இதன் படி, 500 மெகா வாட் மின்சாரம், தமிழக மின் வாரியத்திற்கு, தற் போது கிடைத்து வருகிறது. நீர், அனல் மற்றும் காற்றாலை உள்ளிட்ட மின் உற்பத்தி ஆதாரங்கள், முழு அளவில் மின் உற்பத்தியில் ஈடுபடுவதால், மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகா வாட்டை தொட்டது. இதே நிலை, ஒரு மாதமாக நீடிக்கிறது.தொடர்ந்து, மொத்த மின் உற்பத்தி அதிகரிப்பதால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். அதே நேரத்தில், உயரழுத்த மின் நுகர்வோருக்கு தற்போதுள்ள மின் தடை நீக்கப்பட்டு, முழு அளவில் மின்சாரம் வழங்கும் சூழல் ஏற்படும். கூடங்குளம் மின்சாரமும் விரைவில், இனி ஓரளவு கைகொடுக்கும் என்பதால், காற்றாலை மின் உற்பத்தி பாதித்தாலும், மின் உற்பத்தி அளவு வீழ்ச்சி அடையாது என்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ,இதுகுறித்து, மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், தினசரி மின் நுகர்வின் அளவு குறைந்து உள்ளது. தற்போதுள்ள மின் திட்டங்களில், தேவைக்கு ஏற்ப மின்சாரம் கிடைக்கிறது. மின் பற்றாக்குறையை சரி செய்ய, நீண்ட கால மின் கொள்முதல் முறையில், 1,200 மெகா வாட் அளவிற்கு, மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான முதல் கட்ட பணி முடிந்து உள்ளது.இப்பணி முடிந்தவுடன், அடுத்தடுத்த தொடர் நடவடிக்கைகளில் 15 ஆண்டுகளுக்கு, தனியார் மின் உற்பத்தியாளர்கள் மூலம் கிடைக்கும் மின்சார அளவு கணிசமாக அதிகரிக்கும். அக்டோபர் மாதம் முதல் மழைக்காலம் என்பதால், மின் தேவை மேலும் குறையும். இதனால், மாநிலம் முழுவதும் மின் தடை முற்றிலும் நீங்க, சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click