ரூ.1.06 லட்சம் மின்வாரிய தகவல்கள்இலவசமாக அளிக்க ஆணையம் உத்தரவு


திருநெல்வேலி:நெல்லை மாவட்ட மின் வாரியத்தில் 1.06 லட்சம் என மதிப்பிடப்பட்ட மின் வாரிய தகவல்களை இலவசமாக அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.நெல்லை மாவட்டத்தில் மின் வாரியத்தில் பல்வேறு தகவல்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாளையை சேர்ந்த மனுதாரர் விபரம் கோரினார். இந்த விபரங்களுக்கு குறித்த காலத்தில் பதில் அளிக்காத நிலையில் மேல் முறையீடும் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த தகவல்களை அளிக்க மனுதாரர் 99 ஆயிரத்து 80 ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஊரக செயற்பொறியாளரும், மேலும், 7,805 ரூபாய் செலுத்த வேண்டும் என நகர்புற செயற்பொறியாளரும் மனுதாரருக்கு தெரிவித்தனர்.இதனால் அதிருப்தி அடைந்த மனுதாரர் இதுகுறித்து மாநில தகவல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் மனுவை பரிசீலனை செய்து இதுகுறித்து தமிழ்நாடு தகவல் ஆணைய மாநில தகவல் ஆணையர் அக்பர் பிறப்பித்த உத்தரவில், ""மனுதாரர் கோரியபடி விடுபட்ட கேள்விகளுக்கு தெளிவாகவும், முழுமையாகவும் இலவசமாக பதிலளிக்க பொது தகவல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினால் சுமார் 1.06 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்ட தகவல்களை மனுதாரருக்கு இலவசமாக அளிக்க வேண்டிய கட்டாயம் மின் வாரிய பொது தகவல் அலுவலருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பிரச்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 comment:

TNEB Jawahar said...

வச்சாண்டா ஆப்பு

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click