பிப்ரவரியில் மின் உற்பத்தி 600 கோடி யூனிட் குறைந்தது

புதுடெல்லி : நாட்டின் மின் உற்பத்தி, பிப்ரவரியில் எதிர்பார்க்கப்பட்டதை விட 600 கோடி யூனிட் குறைந்தது. இது குறித்து, மத்திய மின்சார ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் வருமாறு: பிப்ரவரியில் நாட்டின் மொத்த மின் உற்பத்தி, 7,453 கோடி யூனிட் ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது 6,847 கோடி யூனிட் ஆக குறைந்துள்ளது. மத்திய, மாநில மற்றும் தனியார் அனல் மின் நிலையங்களில் இருந்து 6,450 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 5,984 கோடி யூனிட்  மட்டுமே உற்பத்தியானது. நீர் மின்சாரமும் 685 கோடி யூனிட் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 585 கோடி யூனிட் மட்டுமே கிடைத்தது. 


இது பற்றி, தேசிய நீர் மின் உற்பத்தி கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பெரும்பாலான நீர் மின் உற்பத்தி நிலையங்கள் ஆற்று நீரை நம்பியுள்ளதால், வறட்சி காரணமாக மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். இம்மாதத்துடன் முடியும் நடப்பு நிதியாண்டில்(2012,13) மொத்தம் 93,000 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து விடலாம் என மத்திய அரசு கணித்திருந்தது.

ஆனால், பிப்ரவரி மாதம் வரை 83,143 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகி உள்ளது. இதில், அனல் மின்நிலையங்களின் மூலம் 69,156 கோடி யூனிட்களும், நீர் மின் நிலையங்கள் மூலம் 10,493 கோடி யூனிட்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி வரை அணுமின் நிலையங்கள் மூலம் வெறும் 3,000 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது. இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.

1 comment:

krishnamoorthymoorthy said...

Mathya..arsu..analum..manila..arasu..analum..kadandha..15..andukalukku..melaga..tholai..nokku..parvai..illamal..kooduthal..minsaram..vendi..pothiya..minsara,,thittangalai.....uruvakkamal...arasiyal..sithu..padiyathal..ottumotha..desamum..minsaram..kidaikkamal..kathai..pesum..KEVALAMANA...NILAIYIL..ULLATHU...kalamum..makkaqlum..eppothu..thirundhum..?????krishnamoorthy/gobi/26.3.2013

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click