கூடுதல் கட்டுமானப் பணிகளுக்கு தனி மின் இணைப்பு தேவையில்லை (Supply used for any additional construction of building)

P.R No. 6 of 2013-Tamil.pdf

View    Download





P.R No. 6 of 2013-English.pdf

View       Download



வீடுகளில் இரண்டாயிரம் சதுர அடி வரை கூடுதல் கட்டுமானப் பணிகளுக்கு தனி மின் இணைப்புப் பெறத் தேவையில்லை என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சி.குணசேகரன் தெரிவித்துள்ளார்.

வீடுகளில் 2000 சதுர அடி வரையில் கூடுதல் கட்டுமான வேலைகளை மேற்கொள்ளும்போது ஏற்கெனவே இருக்கும் மின் இணைப்பே போதுமானது என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கூடுதல் கட்டுமான வேலைகளுக்கு தனி மின் இணைப்புப் பெற வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் வலியுறுத்துவதாக ஆணையத்துக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சி.குணசேகரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீட்டு உபயோக மின் நுகர்வோர் தங்களது இருப்பிடங்களில் 2000 சதுர அடிக்கு மிகாமல் கூடுதல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விரும்பினால், அந்தந்த கட்டண விகிதத்திலேயே மேற்கொள்ளலாம்.
ஆனால், குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால் அந்த இணைப்புகளுக்கு மட்டும் இந்த விதி பொருந்தாது.
மேலும் இந்தக் கட்டுமானப் பணிகள் 2000 சதுர அடிக்கு மேலே இருந்தால் தாற்காலிக மின் இணைப்புப் பெற வேண்டும் என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் சதுர அடிக்குள் கூடுதல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்போது ஏதேனும் இடையூறுகள் இருந்தால், அந்தந்த மின் விநியோக வட்டத்தில் உள்ள மின் குறைதீர்க்கும் மன்றத்தை நுகர்வோர் அணுகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click