தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் என அழைக்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4000 களப்பணி உதவியாளர்கள்(பயிற்சி) நேரடி ஆள் சேர்ப்பு வழியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிரிமான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:
தற்போது நடைபெற உள்ள ஐடிஐ கள உதவியாளர் பணி நியமனத்திற்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஐடிஐ-யில் வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்று மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரிமானக் கழகத்தில்(தமிழ்நாடு மின்சார வாரியம்) 1 வருடம் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள், 18 வயது முதல் 57 வயது வரை உள்ள நபர்கள், தலைமை அலுவலகம், தமிழ்நாடு மின்சார வாரிய வளாகம் 114, அண்ணாசாலை, சென்னை-600002 அலுவலகத்தில் 02.09.2013 முதல் 13.09.2013 வரையிலான காலத்திற்குள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தொழில் பழகுநர் அசல் சான்றிதழ்களுடன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேற்கூறியவாறு இவ்வலுவலகத்தில் பெயரை பதிவு செய்தவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக பெயர் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்து நேர்காணல் கடிதம் அனுப்பப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tangedco.gov.in, www.tantransco.gov.in, www.tenders.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment