தொழிலாளர் வைப்பு நிதி கழகத்தின், டிரஸ்டிகளின் மத்திய வாரிய கூட்டம், அடுத்த மாதம், 4ம் தேதி நடக்குமென தெரிகிறது. இதில், வருங்கால வைப்பு நிதி முதலீட்டின், நடப்பாண்டுக்கான வட்டி விகிதம் முடிவு செய்யப்படுகிறது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்களின் கணக்கில் சேர்த்துள்ள தொøக்கு ஏற்ப, வட்டி வழங்கப்படுகிறது. கடந்த, 2012-13ம் ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இதற்கு முன், 2011-12ல், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது.
இந்தாண்டு வட்டி எவ்வளவு என்பதை முடிவு எடுப்பதற்காக, தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தின், கொள்கை முடிவுகளை எடுக்கும், டிரஸ்டிகளின் மத்திய வாரிய கூட்டம், அடுத்த மாதம், 4ம் தேதி நடக்குமென, தெரிகிறது.இக்கூட்டத்திற்கு, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தலைமை தாங்குகிறார். வாரியத்திற்கு ஆலோசனைகள் வழங்கும், நிதி மற்றும் தொழில் முதலீட்டு குழு மாற்றியமைக்கப்படும் என, தெரிகிறது. இக்குழு தான், வட்டி எவ்வளவு அளிக்க வேண்டும் என, டிரஸ்டிகளின் மத்திய வாரியத்திற்கு பரிந்துரை செய்யும்.
நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீத வட்டியே தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 8.75 சதவீத வட்டி அளித்தால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு பற்றாக்குறை ஏற்படும். இதை நிதி அமைச்சகம் ஏற்காது. 8.5 சதவீத வட்டி அளித்தால், தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்திற்கு, கூடுதல் நிதி கையிருப்பு காட்டும்.
No comments:
Post a Comment