மின்துறையில் 275 உதவி பொறியாளர் காலி பணியிடம் : பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு (தினமலர் )

சென்னை: மின்துறையில், 275 உதவி பொறியாளர் இடங்களை நிரப்ப, பதிவு மூப்பு அடிப்படையில், பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சூவிடுபட்டோர், அக்.,4ம் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் முறையீடு 

செய்யலாம்' என, தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு துணை இயக்குனர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தில் காலியாக உள்ள, எலக்டிரிக்கல் இன்ஜினியர் 182; மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 50 உட்பட, மொத்தம், 275 உதவி பொறியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முற்பட்ட வகுப்பினர், 2013, ஜூலை, 1ம் தேதியின்படி, 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. இதற்காக மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில், மனுதாரர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். பதிவு மூப்பு விவரம்,www.chennai.nic.in  என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள மனுதாரர் விவரம், சென்னை கிண்டியில் உள்ள தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும், மதுரை கிளை அலுவலக தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன. இதில் பெயர்கள் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்டோர், அக்.,4ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முறையீடு செய்யலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...