காற்றாலை மின்சார உற்பத்தி தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது: தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல்

காற்றாலை மின்சார உற்பத்தி தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன் முதலில் காற்றாலைகளில் இருந்து மின்சார உற்பத்தியை துவக்கியது. தமிழ்நாட்டில் காற்றாலைகள் அமைப்பதற்கு பல்வேறு சலுகைகள் அளித்து வருவதால் இந்தியாவின் காற்றாலை நிறுவு திறனில் 40 சதவீதம்இ அதாவது 7214 மெகாவாட் தமிழ்நாட்டில் மட்டுமே அமைந்துள்ளது.இந்திய அளவில் காற்றாலை உற்பத்தி வாய்ப்பிற்கு தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் இருந்தும் காற்றாலைகள் நிறுவியதில் முதல் இடத்தில் உயர்ந்துள்ளது. நிலையற்ற தன்மை கொண்ட காற்றாலை மின்சாரத்தை மின் கட்டமைப்பில் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே காற்றாலை உற்பத்தி வாய்ப்பில் முதல் 4 இடத்தில் உள்ள குஜராத் கர்நாடகா மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் காற்றாலை உற்பத்தி திறனை ஒரு கட்டுக்குள் வைத்துள்ளன.
எனினும் தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிக்கும் பொருட்டே 7214 மெகாவாட் அளவிற்கு காற்றாலை நிறுவ அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2013-2014-ல் ஜூலை வரை சுமார் 580 கோடி யூனிட் காற்றாலை மின் உற்பத்தி மின் கட்டமைப்பின் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே காற்றாலை மின்சாரம் வாங்கப்படவில்லை என்ற கஸ்தூரிரங்கையனின் கூற்று முற்றிலும் பொய்யான தகவலாகும். காற்றாலையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் நிலையற்ற தன்மைகொண்டது. அதன் உற்பத்தி அளவு அதிக ஏற்ற இறக்கத்துடனும் உயர்ந்தபட்ச உற்பத்திக்கும் குறைந்தபட்ச உற்பத்திக்குமான இடைவெளி அதிகமாக இருக்கும்.
அதாவது ஒரே நாளில் காலையில் குறைந்த பட்சமாக 100 மெகாவாட்டும் மாலையில் அதிகபட்சமாக 3 ஆயிரம் மெகாவாட்டும் காற்றின் வேகத்திற்கேற்ப கிடைக்கும். இம்மாதிரி நிலையற்றதன்மை கொண்ட மின்சாரத்தின் பங்கு ஒரு மாநிலத்தின் தினசரி மொத்த பயன்பாட்டில் 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.ஆனால் நமது மாநிலத்தில் ஒரு நாளின் மொத்தத் தேவையில் காற்றாலை மின்சாரம் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உள்ளது. காற்றாலை மின்சாரம் அதன் அதிகபட்ச அளவில் இருந்து மாறி வெகுவாக குறையும்போது அதே வேகத்தில் அதனை ஈடுசெய்ய தேவையான அளவு நீர் மின் நிலைய வசதி போதுமானதாக இல்லை.
அதுபோலவே காற்றாலை மின்சாரம் வெகுவாக அதிகரிக்கும்போது அதே அளவிற்கு மற்ற நிலையான அனல் மின் நிலைய உற்பத்தியை எளிதில் குறைப்பதற்கான அல்லது நீக்குவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் இல்லை.நமது மாநிலத்தில் நிலையாக மின்சாரம் தரக்கூடிய அதுவும் ஒரு காற்றாலை ஜெனரேட்டரைப் போல 400 மடங்கு உற்பத்தித் திறனுள்ள அனல்மின் நிலைய யூனிட் ஒன்றை கட்டமைப்பில் இருந்து அவ்வப்போது நீக்குவதும் இணைப்பதும் சாத்தியமானதல்ல.குறிப்பாக இரவு நேரங்களில் மின்சுமை அல்லது மின் தேவை குறைந்த காலங்களில் நிலையற்ற அடிக்கடி தன் அளவினை மாற்றிக் கொள்ளும் காற்றாலை மின்சாரத்தை சுழற்சி முறையில் தடை செய்ய நேரிடுகிறது. நிலையற்ற தன்மை கொண்ட காற்றாலை மின்சாரம் வருடத்தில் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும்.னவே மற்ற 8 மாதங்களுக்கு மக்களுக்கு தட்டுப்பாடின்றி மின்சாரம் வழங்கும் பொருட்டு வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறுவதற்கு நடுத்தர நீண்டகால ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவ்வப்போது ஏற்படும் காற்றாலை மின்சாரத்தின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து அவ்வப்போது வெளிமாநில மின்சார சந்தையிலிருந்து வாங்கவோ அப்படி வாங்கினாலும் கொண்டு வரவோ முடியாது.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வரும் மின்பாதைகள் குறைவாகவே உள்ளதாலும் தென்மண்டலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட ஆந்திரா கேரளா கர்நாடகா மற்றும் அனைத்து மாநிலங்களிலும் மின்பற்றாக்குறை அதிகமாகவே உள்ளதால் அனைத்து மாநிலங்களும் மின்சாரம் வாங்க முயலுவதாலும் மின்சாரம் வாங்க மின்பாதைகள் முன்பாகவே பதிவு செய்யப்பட வேண்டும்.இவ்வாறு நடுத்தர கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் மின்சாரம் பெறப்படவில்லையென்றால் தமிழக மக்கள் வருடத்தில் 8 மாதங்கள் மின் தட்டுப்பாட்டால் அவதியுற நேரிடும். நல்ல காற்று வீசக்கூடிய ஆகஸ்டு மாதத்திலேயே 26-ந் தேதியில் இருந்து தற்போது வரை காற்றாலை மின்சாரம் 100 மெகாவாட்டிற்கும் குறைவாகவே கிடைத்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து பெறப்பட்ட மின்சாரத்தின் காரணமாகவே மின்வெட்டு குறைந்த நேரத்தோடு மின் கட்டமைப்பை நிர்வகிக்க முடிந்தது. இல்லையெனில் காற்றாலை மின்சார அளவு குறைந்ததால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் மிக அதிகமாக இருந்திருக்கும்.
மேலும் காற்றாலை நிறுவ அதிக பட்சமாக 3 முதல் 6 மாதம் வரையே தேவைப்படுகிறது. ஆனால் காற்றாலை மின்சாரத்தை விநியோகிக்க தேவையான மின்பாதை துணைமின் நிலையங்கள் அமைக்க குறைந்தபட்சம் இரண்டு மூன்று வருடங்களாவது தேவைப்படும்.
ஆயினும் காற்றாலை உற்பத்தியாளர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே துணை மின்நிலையம் அல்லது மின் தொடர் பாதையில் அவற்றின் திறனுக்கும் அதிகமாக தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பபட்டுள்ளது.கடந்த தி.மு.க ஆட்சியின் முடிவில் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு ரூபாய் 558 கோடியாக இருந்த நிலுவைத்தொகை இந்த ஆட்சி வந்த பிறகுதான் முழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டது. மேலும் இந்த வருடத்தின் ஜூன் மாத வரையிலான காற்றாலை மின் உற்பத்திக்கான தொகை சுமார் 4566 கோடி இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கஸ்தூரிரங்கையன் சொல்வது போல் இங்கே இருந்து மின்சாரத்தை எடுத்துச் செல்லப் பயன்படும் வழித்தடங்கள் வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்திற்கு பயன்படுகிறது என்பதும் அதனால் காற்றாலை மின்சாரம் தவிர்க்கப்படுகிறது என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.தொழிற்சாலைகளுக்குத் தேவையான காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு செல்ல காற்றாலைகளை பயன்படுத்துவது மின்வாரியத்திற்கு விற்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மத்திய மின்கட்டமைப்பு விதிகளுக்கு உட்பட்டே அனுமதிக்க இயலும்.இந்த வருடம் ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை அபரிமிதமாக பெய்து நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி உள்ளதாலும் காவிரியில் வெள்ளப்பெருக்கெடுத்து மேட்டூர் அணை நிரம்பியதாலும் யூனிட்டிற்கு 21 பைசா மட்டுமே செலவாகும் நீர்மின்சாரத்தை கட்டாயமாக பயன்படுத்த வேண்டியிருந்ததால் ஜூன் மாதத்தைவிட ஜூலையில் சற்று குறைவாக காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்த நேரிட்டது.ல்லையெனில் நீர்த்தேக்கங்களில் இருந்து மின் உற்பத்தி ஏதுமின்றி வீணாகத்தண்ணீர் வெளியேற்றப்பட வேண்டியிருந்திருக்கும். காற்றாலை மின்சாரம் ஒரேநாளில் பூஜியத்திற்கும் 3 ஆயிரம் மெகாவாட் அளவிற்கும் மாறிமாறி வரும் தன்மையுடையதால் தமிழ்நாட்டின் குறைந்த பட்சத் தேவையான 9500 மெகாவாட் அளவினை எப்போதும் பூர்த்தி செய்ய அதே அளவு மின்சாரம் எந்த நேரமும் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டிள்ளது.மேலும் நமது மாநிலத்தின் மின்சார அடிப்படைத் தேவையை நிறைவு செய்ய தமிழக முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியாலும் தீவிர கண்காணிப்பாலும் இந்த வருடம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான வட சென்னை இரண்டாம் நிலை அனல்மின் நிலையத்தில் இருந்தும் மேட்டூர் மூன்றாம் நிலை அனல்மின் நிலையத்தில் இருந்தும் மொத்தம் 1800 மெகாவாட்டும்
தமிழ்நாடு மின்வாரிய மற்றும் தேசிய அனல் மின் கழக கூட்டுத் திட்டமான வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூலம் 1000 மெகாவாட்டும் (நமது பங்கு 700 மெகாவாட்) ஆகமொத்தம் 2500 மெகாவாட் அளவிற்கு புதிய மின் உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click