வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை: அக்டோபர் 1 முதல் இணையதள மையங்களில் விண்ணப்பிக்கலாம்

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் இணையதள மையங்களின் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள இணையதள மைய உரிமையாளர்களுக்கான பயிற்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள பொன்விழா அரங்கில் நடைபெற்றது. இந்தப் பயிற்சியை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இணையதள மையங்களை நடத்தும் சுமார் 40 பேர் கலந்துகொண்டனர். மேலும், இதில் 21 உரிமையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரவீண் குமார் பேசியது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்களிடம் இணையதள வசதி இல்லாததால் குறைவானவர்களே இணையதளத்தை பயன்படுத்தினர். கேரள மாநிலத்தில் 75 சதவீதம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். ஆந்திரத்தில் 40 சதவீதம் பேர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் தமிழகத்தில் 7.8 சதவீதம் பேர் மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள 944 இணையதள மையங்களிலும், சென்னை மாநகராட்சியில் உள்ள 86 இணையதள மையங்களிலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் முறை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தொடங்கவுள்ளது.
இதன்படி பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் போன்றவற்றுக்கு அருகில் உள்ள இணையதள மையங்களுக்கு சென்றாலே போதும். பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கு தலா ரூ. 10, பிரிண்ட் எடுக்க ரூ. 3 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புப் பலகை, அனுமதி பெறும் அனைத்து இணையதள மையங்களிலும் வைக்கப்படும். இணையதள மையங்களில் விண்ணப்பிக்கும் நபர்களின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் வந்து விவரங்களை சரி பார்ப்பார்கள். விண்ணப்பிக்கும் முறையில் புகார்கள், விவரங்கள் தேவைப்பட்டால் 1950 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றார். 
கணினி வசதி உள்ளவர்கள் இணைய தள மையங்களுக்குச் செல்லாமல் தாங்களே நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணையதள முகவரி. www.elections.tn.gov.in www.eci.nic.in 

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click