ஓய்வூதிய நிதியும் இனி கூட்டுக் கொள்ளைக்கே:

மத்தியமாநில அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் ஒட்டு மொத்த ஓய் வூதிய நிதியை கார்ப்பரேட்களின் கூட்டுக் கொள்ளைக்கு காங்கிரஸ்பாஜக உள்ளிட்ட கட்சிகள் வழிவகுத்துக்கொடுத்துள்ளன.மக்களவையில் ஓய்வூதிய நிதி ஒழுங் காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா - 2011 நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

முதலில் இதனை எதிர்ப்பதாக கூறி நாடகமாடிய பாஜக உள் ளிட்ட கட்சிகள்மக்களவையில் வாக்கெடுப் பிற்கு வந்தபோது காங்கிரஸ் கட்சியோடு கரம் கோர்த்து ஆதரித்து மசோதாவை நிறைவேற்றி யிருக்கின்றன. இதன் மூலம் அரசு ஊழியர்க ளின் ஓய்வூதியநிதி இனி தனியார் நிறுவனங் களின் கையில் ஒப்படைக்கப்படும்.

இந்த நிறுவ னங்கள் பணத்தை பங்குச் சந்தை உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கை யில் முதலீடு செய்யும். அதில் லாபம் வந்தால் அது ஊழியர்க ளின் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படும். நஷ்டம் ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பட்டை நாமம் சாத்தப்படும் என்பதே இந்த மசோதாவின் சாராம்சம்.

ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதிய நிதியை கையாளும் தனியார் நிறுவனங்களை கண்காணிக்கும். அதன் மூலம் லாபம் உறுதி செய்யப்படும் என அரசு வாதிடுகிறது. உலகமயம் உள்ளூர் மய மான பின்புகார்ப்பரேட்கள் அரசு நிர்வாகத்தை யும் சேர்த்தே கூட்டுக் கொள்ளையில்பங்குதாரர் களாக மாற்றி வருகின்றன அதனால்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல்,நிலக்கரிச் சுரங்க ஒதுக் கீட்டு ஊழல் என பல்வேறு ஊழல்கள் அணி வகுத்து நிற்கின்றன.

அரசு நிர்வாகத்தின் நேரடிக் கண்காணிப்பிலே நடந்தவை தானே இவையெல்லாம்.அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஓரே வழியாக இருக்கும் ஓய்வூதியத்தையும் ஏன் மத்திய அரசு தட்டிப்பறிக்க முயற்சிக்கிறது. பழைய முறைப் படி ஓய்வூதியம் வழங்குவதால்ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயரும் போதுஓய் வூதியத்தையும் உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு அதிகமாகப் பணம் செல வாகிறது. அதனால் அதனைத் தவிர்ப்பதற்காக வே ஊழியர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய் வூதியத்திட்டத்தை அமல்படுத்துகிறோம் என்று அரசு வாதிடுகிறது.

அகவிலைப்படி என்பது விலைவாசிப் புள்ளி உயர்வுக்கேற்பவே நிர்ணயிக்கப்படுகி றது. அப்படி என்றால் ஓய்வூதியம் பெறுவர்க ளுக்கு நாட்டில் விலைவாசியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறதாஇல்லையே. அப்படியி ருக்கும் ஓய்வூதியத்தை உயர்த்துவது அரசின் தார்மீகக் கடமைதானே! அதனை ஏன் தட்டிக் கழிக்க வேண்டும்ஓய்வூதியம் என்பது அரசு தானாகப் பார்த்துத் தருகிற கருணைத் தொகை யல்லஊழியர்களின்உரிமை. ஆனால் அரசுக்காக உழைத்த ஊழியர்க ளைப் பற்றியும்மக்களை பற்றியும் அரசுக்கு கவலை இல்லை.


பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப் பரேட் நிறுவனங்களின் நலன் மட்டுமே முக்கி யம் என்றும் கருதுகிறது. இதில் காங்கிரசும்பாஜ கவும் ஓரே கொள்கையோடுதான் உள்ளன என் பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவர்களை ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களும் இணைந்து தனிமைப்படுத்துவதன் மூலமே தொழிலாளி வர்க்கத்தின் உரிமை யையும் நலனையும் பாதுகாத்திட முடியும்.

--தீக்கதிர் ---

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click