புதிய பென்சன் மசோதா சந்தை திவாலானால் அனைத்தும் பறிபோகும் : மக்களவையில் சிபிஎம் தலைவர் எச்சரிக்கை

ஒருவர் ஓய்வுபெறும்போதுதான் இவ் வளவுதான் ஓய்வூதியம்பெறப்போகிறோம் என்று சொல்லமுடியாத அளவில் உள்ள ஓர்ஓய்வூதியத் திட்டம் நாட்டிற்கு தேவையாஎன்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யாகேள்வி எழுப்பினார்.

மக்களவையில் புதனன்று ஓய்வூதிய சட்டமுன்வடிவின் மீதுநடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பாசுதேவ் ஆச்சார்யாபேசியதாவது:

ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையச்சட்டமுன்வடிவை எங்கள் கட்சி உறுதியாக எதிர்க்கிறது. 2004 ஜனவரி முதல் இதனை  .மு.கூட்டணி அரசு அமல் படுத்தி வருகிறது.அதனைச் சட்டரீதியாக மாற்று வதற்காக இச்சட்டமுன்வடிவினைஇப்போது கொண்டு வந்திருக்கிறதுஇதற்காக ஓர் ஆணை யம்உருவாக்கப் பட்டிருக்கிறதுதற்போதைய பொருளாதார நிலைமைகுறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ள பிரதமர்மேலும் சில கடினமானசீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றுகூறியிருக்கிறார்அதில் ஒன்றுதான் இந்த புதிய ஓய்வூதிய முறையாகும்.

நம்முடைய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் அமெரிக்கஅரசாங்கத்தின் கட்ட ளைப்படிதான் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனஓய்வூதிய நிதியச் சட்டமுன்வடிவும் அதன் கட்டளைப்படிதான் கொண்டுவரப்பட்டிருக்கிறதுஇவ்வாறு இதனைமாற்றவேண்டும் என்று அமெரிக்காவும்உலக வங்கியும் சர்வதேசநிதியமும் ஏன் துடிக்கின்றனபழைய ஓய்வூதிய அமைப்புநாடுசுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டதுஓய்வூதியம்என்பது ஒன்றும் கருணைத் தொகை அல்லநாம் சுதந்திரம்பெற்றபின் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு ஊதியக்குழுக்களைப் பார்த்துவிட்டோம்இந்த ஆறு ஊதியக்குழுக்களுமே ஓய்வூதியம் என்பதுஊழியர்கள் மற்றும் தொழி லாளர்களின் பிரிக்கமுடியாத உரிமைஎன்று ஒரே சீராகப் பரிந்துரைத்திருக்கின்றன.

எனவேஇது அவர்களுக்கு அளிக்கப்படும் கருணை அல்லஆனால்,புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஊழியர்களுக்குஉறுதியானமுறையில்பயன் பாடுகள் அளிக்கப்படவில்லை.ஊழியர்களின் சேமிப்பு பங்குச் சந்தையில் போடப்படவிருக் கின்றன.அது என்னாகும்இது தொடர்பாக எந்த உறுதிமொழியும்ஊழியர்களுக்கு வழங்கப்பட வில்லைபுதிய ஓய்வூதியச் சட்டத்தில்பாஜக திருப்தி கொண்டிருப்பது எப்படிஎன்று எனக்குத்தெரியவில்லைதொழிலாளர்களின் தொகை பங்குச்சந்தை யில்போடப்பட்டுஅதில் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற் பட்டால்ஊழியர்களுக்குஎந்தத் தொகையும் வழங்கப்படமாட்டாதுஇப்படி உள்ள ஒரு சட்டமுன்வடிவை எப்படி பாஜகவினர் ஆதரிக் கிறார்கள்மேலும்பொருளாதாரத்தில் பண வீக்கத்தின் அழுத்தத்திற்கு ஏற்பஊழியர்கள் பெறும் உண்மை ஓய்வூதியத்தின் மதிப்பும் குறையும்.பல நிறுவனங்கள் ஆசைகாட்டி ஊழியர்களை மோசம்செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

குறிப்பாக நான்காம் நிலை ஊழியர்கள் ஏமாற்றப்படுவதற்குஏராளமான வழிகள் இருக்கின்றனபுதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி10 விழுக் காடு ஊதியம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்துபிடிக்கப்படுகிறதுஇவ்வாறு 2004 ஜனவரி 1லிருந்தே பிடித்தம்தொடங்கிவிட்டதுஇதே அளவு தொகையை அரசும் செலுத்தவேண்டும்இவ்விரண்டு தொகையை வைத்து ஒரு நிதியம்உருவாக்கப்படுகிறதுஇதனை நிதிய மேலாளர் எனப்படும்நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார்கள்ஒரேயொரு மேலாளரைத்தவிர மற்ற அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும்மாபெரும்தொகை இவர்களிடம் தூக்கிக் கொடுக்கப்பட இருக்கிறது.

இதன் பொருள்அரசாங்கத்தின் பணம்தனியார் நலன்களுக்காகப்பயன்படுத்தப் பட விருக்கிறது என்பதேபுதிய ஓய்வூதியத் திட்டம்கொண்டுவரப் படுவதன் மூலம் இருவித ஊழியர்களும் உருவாக்கப்பட விருக்கிறார்கள்ஒரு பகுதியினர் பழைய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் உத்தர வாதமான வருமானத்தைப் பெறுவார்கள்.புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள்தங்கள்சம்பளத்தில் மாதந்தோறும் பத்து விழுக்காடு சம்பளத்தைத் தரும்ஊழியர்கள்ஆனால்இவர்கள் ஓய்வு பெறும்போது எவ்வளவுஓய்வூதியம் பெறுவார்கள் என்று அரசாங்கத்தால் இவர்களுக்குச்சொல்ல முடியாது.

.மு.கூட்டணி 1 அரசாங்கக் காலத்தில் இக்கேள்வி யைப் பலமுறைநான் நிதி அமைச்சர் .சிதம்பரத்திடம் கேட்டேன்அவர்களின்தொகை சந்தை நிலவரத்தைச் சார்ந்திருக்கும் என்பதால்ஓய்வூதியம் எவ்வளவு பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லைஎன்று பதிலளித்தார்சந்தை திவாலாகிப்போனால்ஊழியர்கள்அனைத்தையும் இழந்து விடுவார்கள்இவ்வளவு மோசமானசட்டத்தை நாம் ஏன் கொண்டுவர வேண்டும்நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் ஊழியர்கள் மத்திய அரசாங்கத்திலும்மாநிலஅரசாங்கங்களிலும்வங்கி மற்றும் இதர நிறுவனங்களிலும்பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள்இவர்களின் எதிர்காலவாழ்வை ஏன் கேள்விக்குறியாக்குகிறீர்கள்இது அரசிய லமைப்புச்சட்டத்தின் 14வது பிரிவிற்கு எதிரான தாகும்.

யாருடைய கட்டளைப்படியாருடைய நோக்கம்நிறைவேறுவதற்காக இதனைக் கொண்டுவருகிறீர்கள்இதுதொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில்ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக.சிதம்பரம் தெரிவித்தார்அந்த ஒன்று என்னஅதுதான் மிகவும்முக்கியமான பரிந்துரையாகும்நாடாளுமன்ற நிலைக்குழு தன்அறிக்கையில், ‘‘சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்டஅளவு ஓய்வூதியம் பெறுவதை உத்தரவாதம் செய்யக்கூடியவிதத்தில் ஒரு ஏற்பாட்டை அரசு உருவாக்கிட வேண்டும்அதன்மூலம் இதர ஓய்வூதியதாரர்களுக்கு எதிராக எந்தவிதமானபாதகமும் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படாது பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நிலைக்குழு விரும்புகிறது’’ என்று கூறியிருந்தது.மற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய ஓய் வூதியதாரர்களுக்கும்இடையே பாகுபாடு இல் லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும்என்று நிலைக்குழு கோரியிருந்ததுஇந்த பரிந்துரை யைத்தான் அரசுகண்டுகொள்ளவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வர லாற்றுச் சிறப்புமிக்கஇரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றதுநாட்டிலுள்ள 11 மத்தியதொழிற்சங் கங்கள் இணைந்து கடந்த பிப்ரவரி 20, 21 தேதி களில்நடைபெற்ற மேற்படி வேலைநிறுத்தத் திற்கான அறைகூவலைவிடுத்தனஐஎன்டியுசி முதல் பிஎம்எஸ் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. ‘‘அரசாங்கம்புதிய ஓய்வூதியத்திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்,ஏனெனில் இது பெரும்பகுதி ஊழியர்களிடையே பாகுபாட்டைஉருவாக்குகிறதுஇதுஓய்வூதியப்பயன்களைப் பெறுவதைஊழியர்களிடமிருந்து பறித்துவிடு கிறது’’ என்று கூறித்தான்இவ்வேலை நிறுத்தம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டம் சட்டமானால்அடுத்த 34 ஆண்டுகளில்நாட்டிலிருந்து வெளி யேறும் பணத்தின் மதிப்பு தற்போதுள்ள 14 ஆயிரத்து 284 கோடி ரூபாயிலிருந்து 57 ஆயிரத்து 088 கோடி ரூபாயாகஅதிகரிக்கும்இது நாட்டிலுள்ள ஊழியர்களுக்கும்தொழிலாளர்களுக்கும் எதிரா னதுஎனவே அரசு,வழக்கத்திலிருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடரவேண்டும்புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ்ஓய்வூதிய தாரர்இறந்தால் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடை யாது.பணிக்கொடைக்கும் எந்த வாய்ப்பும் கிடையாதுஎனவேஇச்சட்டமுன்வடிவை நாங்கள் உறுதிபட எதிர்க்கிறோம்.அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும்.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...