தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர்கள் பணி காலியிடம் எப்படி விண்ணப்பிக்கவேண்டும்? என்று, வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு (தினதந்தி )

சென்னை
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், உதவிப்பொறியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியில் சேருவதற்கு எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்று வேலைவாய்ப்புத்துறை அறிவித்து உள்ளது.
இது குறித்து, தமிழக அரசு தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் த.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
பி.இ. பட்டதாரிகள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் என பல்வேறு பிரிவுகளில் உதவி பொறியாளர் (ஏ.இ.) பணிக்கான காலியிடங்கள் நிரப்படவுள்ளன.
அதற்கு பி.இ. பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. காலியிட விவரம் வருமாறு:–

275 இடங்கள்
எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் (இஇஇ) 182, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் (எம்இசிஎச்) 50, சிவில் என்ஜினீயரிங் (சிவில்) 25, எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் (இசிஇ) 10.
கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம் என்ஜினீயரிங் (ஐடி/சிஎஸ்) 4, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேன் என்ஜினீயரிங் (இஐ) 4.
வயது வரம்பு?
இதற்கான வயது வரம்பு வருமாறு:–
முற்பட்ட வகுப்பினர் 1–7–2013 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்/பழங்குடியினர்/தாழ்த்தப்பட்ட வகுப்பினர்(அருந்ததியர்)/மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/ பிற்பட்ட வகுப்பினர் / முஸ்லிம்/ இதர பிற்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.
பதிவு மூப்புடன்...
மேற்குறிப்பிட்டுள்ள காலியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்புடன் மனுதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பதிவு மூப்பு விவரம் www.chennai.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பரிந்துரை பதிவு மூப்புக்குள் பதிவு செய்துள்ள தகுதியான மனுதாரர்களது விவரம், ‘‘தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், கிண்டி, சென்னை–600032’’ மற்றும் மதுரை கிளை அலுவலக தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இதில் விடுபாடுகள் இருப்பின் 4–10–2013 தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முறையீடு செய்யலாம்.
இவ்வாறு தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் த.விஜயகுமார் கூறி உள்ளார்.

1 comment:

Unknown said...
This comment has been removed by a blog administrator.

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click