கோவை: தமிழகத்தில் மின்பயன்பாடு குறித்த விபரங்களை கணக்கிட உதவும் ஏ.பி.டி., மீட்டரை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக, டில்லி குளோபல் எனர்ஜியின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவையில் தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்க தலைவர் பாலசுந்தரம் பேசியதாவது: மத்திய மின் தொகுப்புடன் தென் இந்திய மின் இணைப்பை இணைக்கும் திட்டம் 2014 ஜூனில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் மின்சார பகிர்ந்தளிப்பு குறித்து தெளிவான தகவல் வெளியிடப்படாமல் நடப்பு நிதியாண்டில் இழப்பை ஈடுபடுத்தும் வகையில் தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்திற்கு உயர் அழுத்த மின் நுகர்வோர் 8 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளது, என்றார்.
டில்லி குளோபல் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை அதிகாரிகள் பிரசாந்த் கன்கோஜி, அமித்குமார் பேசியதாவது: இந்தியாவில் 1996 முதல் பணியை துவக்கினோம். பிரத்யேக உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறோம். மின்சார இடமாற்ற கூட்டமைப்பை மேம்படுத்தாமல் மத்திய மின் தொகுப்பு திட்டத்தை செயல்படுத்துவதால் எவ்வித பயனுமில்லை. மின்பயன்பாடு குறித்த விபரங்களை கணக்கிட உதவும்படி ஏ.பி.டி., என்ற பிரத்யேக மீட்டரை உயர் அழுத்த மின் நுகர்வோர் கட்டாயம் பயன்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தமிழகத்தில் விரைவில் அமல்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.
No comments:
Post a Comment