மழைக்காலத்தில் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தினகரன் செய்தி

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மின்சாரத்தை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தவது என அரசு தலைமை மின்ஆய்வாளர் அப்பாவு கூறியதாவது: புயல் மற்றும் கனமழை காரணமாக மின்வயர்கள்,
மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் மின்வாரிய பொறியாளர்கள் அலுவலகத்திற்கு தகவல் தரவேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, மூன்று பின்கள் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு தர வேண்டும்.

ஈ.எல்.சி.பி.யை (மின் கசிவு தடுப்பான்) மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தினால் மின் கசிவால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம். டிவி ஆண்டனாவை வீட்டு அருகே செல்லும் மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கட்டக்கூடாது. கேபிள் டிவி ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு வீட்டுக்கும் எர்த் இணைப்பு இருக்க வேண்டும்.

மின் கம்பத்தின் மீது கயிறு கட்டி துணி காயவைப்பதை தவிர்க்கலாம். சுவற்றின் உள்பகுதியில் மின் ஒயர் சென்றால் அங்கு ஆணி அடிக்க கூடாது மின்கம்பம் மீது விளம்பர பலகைகளை கட்டக் கூடாது. மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.
மின்சார தீ விபத்துகளுக்கு உரிய தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியிலோ, குடிசை வீட்டிலோ, மரத் தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ நிற்கக் கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். டிவி, மிக்சி, கிரைண் டர், கணினி, மின்விசிறி போன்றவற்றை பயன்படுத்த கூடாது.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click