இணையதளம் மூலம் மின் கட்டணம் மற்றும் மின் புகார் தெரிவிக்க, ஒரே, "லாகின்' வசதியை, மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான, "டான்ஜெட்கோ'வின் இணைய தளத்தில், மின் கட்டணம் மற்றும் மின் புகார் தெரிவிக்க, தனித்தனியே, 'லாகின்' செய்ய வேண்டும். தற்போது, இரண்டு சேவைகளுக்கும், ஒரே, 'லாகின்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, "டான்ஜெட்கோ' இணையதளத்திற்கு சென்று, 'ரீச் அஸ்' என்ற பகுதியை, "கிளிக்' செய்த உடன், "கன்ஸ்யூமர் கம்ப்ளெய்ன்ட்' என்ற தலைப்பு வரும். அதை, "கிளிக்' செய்த உடன், 'லாக் பேஜ்' வெளிப்படும். இதில், மின் கட்டணம் செலுத்துவதுடன், மின் சம்மந்தமான புகாரையும் தெரிவிக்கலாம். 'டான்ஜெட்கோ' இணையதளத்தின், முதல் பக்கத்திலும், இந்த வசதி உள்ளது. பழைய முறையில், இணையதளம் வாயிலாக, மின் புகார் செய்தால், தமிழகம் முழுவதும் உள்ள, 42 மேற்பார்வை பொறியாளர் மட்டுமே, புகாரை பார்க்கும் வசதி இருந்தது. புதிய வசதி மூலம், சம்மந்தப்பட்ட உதவி பொறியாளர், பிரிவு அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்க இயலும். உயரதிகாரிகள், புகார் மீதான தற்போதைய நிலையை கண்காணிக்க முடியும். இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "டான்ஜெட்கோ' இணையதளத்தில், பதிவு செய்யாதவர்களும், புதிய சேவை மூலம், மின் திருட்டு, முறைகேடு குறித்த தகவல்களை தெரிவிக்க முடியும். புகார்தாரருக்கு, தனி ஐ.டி.,எண் வழங்கப்படும். அதன் மூலம், புகாரின் தற்போதைய நிலவரம் பற்றி, நுகர்வோர் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment