அமைப்பு சாரா மின் பணியாளர்களுக்கு புதிய சம்பளம் நிர்ணயம்

சென்னை, அக். 7–
அமைப்பு சாரா மின் பணியாளர்களுக்கு புதிய சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அல்லாமல் தனியாக மின் பணிகளை செய்வோரை அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

வீடுகளில் மின் பணிகள், எலக்ட்ரிக்கல் சாதனங்களில் ஏற்படும் பழுதுகளை சரிபார்க்கும் பணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபடுகிறார்கள்.
இவர்களுக்கு புதிய சம்பளத்தை தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற சங்கம் நிர்ணயித்துள்ளது. இது குறித்து சங்க நிறுவனர் நாகலிங்கம், தலைவர் சுப்பிரமணி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் நிலவி வந்த மின்பற்றாக்குறையை போக்கி, காற்றாலை, சூரியசக்தி போன்ற மரபு சாரா எரிசக்தி திட்டங்களை கொண்டு வந்த முதல்– அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் அமைப்பு சாரா பிரிவில் பணியாற்றும் மின்பணியாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும்.
மின்வாரியத்தில் வேலை பார்க்கும் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் மின்பராமரிப்பு பணிகளை செய்ய சங்க உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து அமைப்பு சாரா ஸ்கில்டு மின் பணியாளர்களுக்கு (உபகரணங்களுடன்) நாள் ஒன்றுக்கு ரூ.700 சம்பளமும், செமி ஸ்கில்டு ஊழியர்களுக்கு ரூ.500, உதவியாளர்களுக்கு ரூ.400 என புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் போது ஒரு சதுர அடிக்கு கூலியாக ரூ.40 வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click