மின்வாரிய கணக்கீட்டாளர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்ததால் குளறுபடி: சிலர் மட்டுமே பயன்பெறும் நிலை ( தினமலர் )


 தமிழ்நாடு மின்வாரியத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பில், இந்தாண்டு புதிதாக வயது வரம்பை நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட ஒரு ஆண்டில் பதிவு செய்தவர்கள் மட்டுமே பயன்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தில் கணக்கீட்டாளர் பணிக்கு அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் வயது வரம்பு உண்டு. அதற்குமேல் டிகிரி வரை படித்தவர்கள் அனைவருக்கும் வயது வரம்பு 57 வரை உண்டு. இம்மாத துவக்கத்தில் மின்வாரியம் ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமின்றி அதற்கு மேல்டிகிரி வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கும், புதிதாக வயது வரம்பை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 32 வயதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்களுக்கு 35 வயதும் உச்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
மின்வாரிய அறிவிப்பை தொடர்ந்து அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் தகுதியுள்ளவர்களுக்கான பதிவு மூப்பு விபரங்களை அறிவித்துள்ளது. 
உதாரணமாக, விருதுநகர் அலுவலகத்தில் 24-6-1996 வரை பதிவு செய்துள்ள பி.சி., மற்றும் எம்.பி.சி., ஆண்களுக்கு நேர்முகத்தேர்வு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி 1996 ம் ஆண்டு பதிவு செய்தவர்கள் மட்டுமே, 32 வயதுக்குட்பட்டு தகுதி பெறுகின்றனர். அதற்கு முந்தைய ஆண்டில் பதிவு செய்தவர்கள், 32 வயதை கடந்துவிடுகின்றனர். 1996 க்கு பிறகு பதிந்தவர்களும் பங்குபெற முடியாது. 
குறிப்பிட்ட அந்த ஆண்டில் பதிவுசெய்தவர்கள் தவிர, மற்ற அனைவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது பட்டதாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கூறுகையில், ""இதற்கு முன் இப்பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதில்லை. கடந்த மாதம் மின்வாரிய ஹெல்பர் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ படித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதற்கும் 18 வயது முதல் 57 வயது வரை தகுதியுடையவர்கள் பலரும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இப்போது மட்டும் எதற்காக வயது வரம்பை நிர்ணயித்துள்ளனர். இதனால் வீண் குழப்பம் தான் ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பதிவு செய்து காத்திருக்கும் எங்களுக்கு, அரசு தலையிட்டு உடனடியாக வயது வரம்பை நீக்கி வழக்கம்போல் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click