பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு மின் வாரியத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்கள் (dinakaran )


நெல்லை, : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத¢தில் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் சமயமூர்த்தி கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரால் தமிழ்நாடு மின் வாரியத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு பரிந்துரைப்பதற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கல்வித் தகுதியாக எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


1.1.2013 அன்று பொது வகுப்பினர் 30 வயதுக்குள்ளும, எஸ்டி, எஸ்சிஏ, எஸ்சி இனத்தவர்கள் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 


எம்ப¤சி, பிசி இனத்தவர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயதுவரம்பில் 10 ஆண்டுகள் சலுகை உண்டு. எஸ்டி, எஸ்சிஏ, எஸ்சி, எம்பிசி, பிசிஎம் மற்றும் பிசி இனத்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்ச்சி விதி பொருந்தாது. இது தொடர்பான விதி 12(டி) பொருந்தாது.
தகுதியுள்ள பதிவுதாரர்கள் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை நெல்லை மாவட்ட இணையதளத்திலும், வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகையிலும் தெரிந்து கொள்ளலாம்.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=236334&cat=504

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...