மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அம்மசோதா விவாதிக்கப்படும் நாளில் இரண்டு மணி நேரம் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்து எதிர்ப்பை காட்ட ஊழியர்களுக்கு அழைப்பு | WITHDRAW CONTRIBUTORY PENSION SCHEME

மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்  திட்டம் / PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) மசோதாவை தாக்கல் செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளது. 
 
அதற்காக நாடாளுமன்ற நடப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில்(பட்டியல்) இந்த மசோதாவை சேர்த்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் பட்டியலில் உள்ளதால், மத்திய அரசு இந்த மசோதா குறித்து எந்த நாளிலும் விவாதம் நடத்தும் என்று தெரிய வருகிறது.
 
 
இதையடுத்து மத்திய அரசின் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் விரோதப் போக்கை மத்திய அரசு பணியாளர்கள் மகாசம்மேளனம் கண்டிக்கிறது என்றும், ஆரம்பத்திலிருந்தே இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும், இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் இடதுசாரி கட்சிகளும் தங்களின் பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆயினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பினால் இந்த மசோதாவை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை. எனவே PFRDA மசோதாவை விவாதத்திற்கு எடுத்து கொள்ளும் நாளன்றோ அல்லது மறுநாளோ (தகவல் காலதாமதமாக கிடைக்கும் பட்சத்தில்) மத்திய அரசின் போக்கை எதிர்த்து நாட்டிலுள்ள அனைத்து மத்திய அரசு அலுவகங்களின் முன் இரண்டு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய அரசு பணியாளர்களின் மகாசம்மேளனம் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...