திருவண்ணாமலை: வீட்டு மின் இணைப்பு கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலை: "வீட்டு மின் இணைப்புக்கு டிபாஸிட் தொகை செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு சரியான தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்' என, கலெக்டர் ஞானசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாய நிலங்களுக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்வது குறித்து விவசாயிகள் மற்றும் மின்வாரிய அலுவலர்களுடன் கலெக்டர் ஞானசேகரன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மின் ஒயர்களை உயர்த்தி கட்டுவது குறித்தும், கரும்பு வெட்டும் முன் தாழ்வாக உள்ள மின் ஒயர்களை உயர்த்தி கட்டுவது குறித்தும், மழை காலம் துவங்கி விட்டதால், மின்மாற்றிகள் பழுது ஏற்படுவதை சரி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
""வீட்டு மின் இணைப்புக்கு டிபாசிட் தொகை செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும். அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டும்,'' என அதிகாரிகளை கலெக்டர் ஞானசேகரன் கேட்டு கொண்டார்.
சாலையோரங்களில் புதிதாக அமைக்கப்படும் மின்கம்பங்கள், 30 அடி உயரத்துக்கு குறையாமல் நடுவது, மின் துண்டிப்பு ஏற்பட்டால் அதனை தெரிவிக்க இணையதள வசதி மாவட்ட தலைநகரங்களில் அமைக்க நடவடிக்கை எடுப்பது, பசுமை வீட்டுக்கு மானிய இணைப்புகள் வழங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=780667

No comments: