மின்சார வாரியத்தில் 4,000 ஹெல்பர் பணி அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை என முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது (தினகரன் செய்தி)

ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு மின்சார வாரியத்தில் 4,000 ஹெல்பர் பணியிடங்கள் 

தமிழ்நாடுமின்சார வாரியத்தில் 4,000 ஹெல்பர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுகிறது. அதையொட்டி, மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை டிப்ளமோ கல்வித் தகுதி அடிப்படையிலும், ஹெல்பர் பணியிடங்களை ஐடிஐ கல்வித்தகுதி அடிப்படையிலும் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் மூலம், பணியாளர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான பரிந்துரை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஐடிஐ கல்வித்தகுதி அடிப்படையில் 4 ஆயிரம் ஹெல்பர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமைப் பட்டியலை வேலைவாய்ப்புத்துறை நேற்று வெளியிட்டுள்ளது. ஒரு பணியிடத்துக்கு 5 நபர்கள் வீதம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை என முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 57 வயது வரையிலான நபர்களின் பெயர்களும் பரிந்துரைப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. மேலும், ஐடிஐ எலக்ட்ரீஷியன், ஐடிஐ வயர்மேன் கல்வித்தகுதியை பதிவு செய்துள்ள பெண்கள் அனைவரும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், முன்னாள் படைவீரர், ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், அரசுக்கு நிலம் வழங்கியோர் உள்ளிட்ட முன்னுரிமை பதிவுதாரர்கள் அனைவரது பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.ஒரு பணியிடத்துக்கு 5 நபர்கள் என்ற அடிப்படையில், முன்னுரிமை இல்லாத வர்களுக்கான உத்தேச கட்  ஆப் விபரம்:
எஸ்.சி (அருந்ததியர்)  5.1.2006, எஸ்.சி (பொது)  13.1.1999, எஸ்.டி (பொது)  2.8.2004, எம்.பி.சி (பொது)  18.11.1997, பி.சி (முஸ்லிம்)  10.1.2001, பி.சி (பொது) 15.10.1996, ஓ.சி (பொது) 27.11.1998, ஓ.சி (மாற்றுத்திறன்)  21.3.2000.
குறிப்பிட்ட பதிவுத் தேதிக்குள் உள்ள தகுதியுடைய நபர்கள், தங்களின் பெயர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்ற விபரத்தை, சம்மந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும், உரிய கல்வித் தகுதி, கட்  ஆப் தேதி இருந்தும், பெயர் விடுபட்டிருந்தால், தங்களின் பெயரை பட்டியலில் சேர்க்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களிடம் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

3 comments:

Sharukesh said...

http://www.thanjavur.nic.in/pdf/Helper%20Cut%20off.pdf

Sharukesh said...

http://www.thanjavur.nic.in/pdf/Helper%20Cut%20off.pdf

Unknown said...

ENNA SIR YEARLY YEARLY EATHA VALLIA POCHU