கடலூர் :மின் வாரியத்தில் காலி பணியிடங்கள் பதிவு மூப்பு பட்டியல் சரிபார்க்க அழைப்பு


கடலூர் : தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் சரிபார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நிர்வாக கிளை, தலைமைப் பொறியாளரிடமிருந்து தொழில் நுட்ப காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. 
இதன்படி எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் 822, எலக்ட்ரானிக்கல் கமியூனிகேஷன் இன்ஜினியரிங் 45, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 48, இன்ஸ்ட்டுமென்ட்டேஷன் கன்ட்ரோல் இன்ஜினியரிங் 18, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில் நுட்பம் 18 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தெரிவிக்கப்பட்டுள்ள பதிவு மூப்பிற்குட்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ரேஷன் கார்டு, அசல் சான்றிதழ்களுடன் தகுதியான மனுதாரர்கள் வரும் 5ம் தேதிக்குள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

No comments: