பென்ஷனை நிறுத்தி வைக்க உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: "பென்ஷன் என்பதுஒருவர்நீண்ட காலம் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதிஅதுஅவரின் உரிமை

. ஒருவர் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள், வழக்குகள் ஆகியவற்றை காரணமாக வைத்துஅவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க முடியாதுஎனசுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்ஜித்தேந்திர குமார் ஸ்ரீவத்சவா மீதுகுற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதை காரணமாக வைத்துஅவருக்கான பென்ஷன் மற்றும் பணிக் கொடையை கொடுக்காமல்அம்மாநில அரசு நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்துஅவர்ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட்ஜித்தேந்திர குமாருக்குபென்ஷன் கொடுக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்துஜார்க்கண்ட் மாநில அரசு,சுப்ரீம் கோர்ட்டில்மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்தநீதிபதிகள்,ராதாகிருஷ்ணன்ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்பிறப்பித்த உத்தரவு: பென்ஷன்,பணிக்கொடை ஆகியவைஒரு ஊழியர்நீண்ட காலமாகநேர்மையுடன் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி. அதுஅவரின் சொத்து போன்றது. பென்ஷன் என்பதுஊழியரின் உரிமை. அரசியலமைப்பு சட்ட பிரிவு31 (ஏ)இதை உறுதி செய்கிறது. எனவேசம்பந்தபட்ட ஊழியர் மீதுள்ள வழக்குகள்துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை காரணமாக வைத்து,அவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க முடியாது. இதுஅவரின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயல். இவ்வாறுநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click