துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படும் போது, மின்சாரத்தை நிறுத்தாமல், ஊழியர்கள் கவச உடை அணிந்து, அவற்றை சரி செய்யும் திட்டத்தை, மின் வாரியம் துவக்க உள்ளது. தினமலா் செய்தி


துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படும் போது, மின்சாரத்தை நிறுத்தாமல், ஊழியர்கள் கவச உடை அணிந்து, அவற்றை சரி செய்யும் திட்டத்தை, மின் வாரியம் துவக்க உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, அதிக மின்சாரத்தை கொண்டு வரக்கூடிய, 400 கிலோ வோல்ட்; 230 கி.வோ., திறனுள்ள துணை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், ஏதாவது ஒரு சாதனத்தில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, துணை மின் நிலையம் முழுவதும், மின் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இதனால், பழுது சரி செய்யப்படும் வரை, வீடு உள்ளிட்ட இணைப்புகளுக்கு, மின் தடை செய்யப்படுகிறது. இதை தவிர்க்க, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், துணை மின் நிலைய சாதனங்களில் பழுது ஏற்பட்டால், மின் இயக்கத்தை நிறுத்த தேவையில்லை. மின்சாரம் பாயும் போதே, பழுதை சரி செய்ய, ஊழியர்களுக்கு, நவீன கவச உடைகளை, மின் வாரியம் வாங்கியுள்ளது. இத்திட்டம், சென்னை, கொரட்டூரில் உள்ள, 230 கி.வோ., துணை மின் நிலையத்தில், இன்று செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊழியர்களுக்கு, மின்சாரம் பாயாத நவீன ஆடைகள், 'ஷூ' ஆகியவை வாங்கப்பட்டு உள்ளன. அந்த ஆடைகள், 25 சதவீத, 'ஸ்டீல்' மற்றும் 75 சதவீதம் கம்பளியால் தயாரிக்கப்பட்டவை. ஒரு ஆடை தொகுப்பின் விலை, 3 லட்சம் ரூபாய்.மின் சாதனங்கள் மேல் அமர்ந்து, பழுதை சரி செய்ய, சிறப்பு உபகரணங்களும் வாங்கப்பட்டு உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு, 15 லட்சம் ரூபாய். தேவைக்கு ஏற்ப, கூடுதலாக ஆடைகள் வாங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click