இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்

Jun 29, 2018

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி


வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்
பதற்கு கடைசி தேதி!
வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக, மானிய விலையில் மேற்கூரை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வரும் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதியாகும்.

இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில்,மின்கட்டமைப்புடன் கூடிய சோலார் மேற்கூரை திட்டத்தின்கீழ், வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், என்ஜிஓ-க்கள் ஆகியோருக்கும் இச்சலுகை பொருந்தும். ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க ரூ.60,000 செலவாகும்.

இதில், ரூ.18,000 மானியமாக வழங்கப்படும்.
ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் மேற்கூரை அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவைப்படும்.

ஒருகிலோ வாட் மேற்கூரை அமைத்தால் மாதம் ஒன்றுக்கு 250 யூனிட் வரை சோலார் மூலம் மின்னுற்பத்தி செய்ய முடியும்.

5 ஆண்டு இலவச பராமரிப்புஇந்த சூரியஒளி மின்சாரத்தைக் கணக்கீடு செய்வதற்காக இருவழி பயன்பாடு மீட்டர் பொருத்தப்படும்.

சோலார் மேற்கூரை மின் கட்டமைப்புகள் கிரிட்டுடன் இணைக்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வரை மின்சார கட்டணம் மிச்சமாகும்.

அத்துடன், சோலார் மேற்கூரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 5 ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கப்படும்.

இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ், கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு 12 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு, வரும் 30-ம் கடைசி தேதியாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments: