பணம், ஜாதி சிபாரிசுக்கு முற்றுப்புள்ளி இணையத்தில் மின் வாரிய இடமாறுதல்எந்த சிபாரிசுகளுக்கும் இடம் தராமல், நேர்மையான முறையில், விருப்ப இடமாறுதல் வழங்குவதை உறுதி செய்ய, அது தொடர்பான விபரங்களை, ஜனவரி முதல், இணையதளத்தில் வெளியிட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்களுக்கு, இடமாறுதல், பதவி உயர்வு வழங்க விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஆண்டுக்கு இரு முறை, அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், இடமாறுதல் தேவைப்படுவோரிடம், விருப்ப மனு பெறப்படும். அதில், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்த பின், இடமாறுதல் வழங்கப்படும்.
கடந்த பல ஆண்டுகளாக, விதிமுறைகளை கிடப்பில் போட்டு, பணம் தந்தவர்களுக்கு மட்டும் இடமாறுதல் வழங்கப்பட்டது; இதனால், பலர் பாதிக்கப்பட்டனர். நீண்ட இடைவெளிக்கு பின், இந்த ஆண்டில், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விருப்ப அடிப்படையில் இடமாறுதல் வழங்கும் முறையை, மின் வாரியம் செயல்படுத்தியது. மின்துறை செய்திகள்
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, இடமாறுதலுக்கு பணம் வாங்கவில்லை என்றாலும், நாமக்கல், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும், முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், எத்தனை பேர் விருப்ப இடமாறுதல் கேட்டனர்; அவர்களில், யாருக்கு மாறுதல் கிடைத்தது; கேட்ட இடம் கிடைத்ததா என்ற விபரங்கள் வெளியில் தெரிவதில்லை
இனி, விருப்ப இடமாறுதலுக்கு வாங்கப்படும் மனுக்கள் விபரம், பணி செய்யும் இடம், மாறுதல் கேட்கும் இடம், காலி இடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், உடனுக்குடன் மின் வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். மனு வாங்கும் கடைசி தேதி முடிந்ததும், இணையதளம் வாயிலாகவே பரிசீலித்து, இடமாறுதல் வழங்கப்படும்.
இந்த விபரங்கள் அனைத்தையும், இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இதனால், பணம், ஜாதி என, எந்த சிபாரிசுக்கும் இடம் இல்லாமல், இடமாறுதல் வழங்கப்படும். இது, 2018 ஜன., முதல் அமல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment