வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத் தொகையான சுமார் 18 கோடியை வழங்கிட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயல்படும் சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டம் திங்களன்று தொமுச பொதுச் செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநிலத்தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், ஏஐடியுசி சம்மேளன பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், கணக்காயர் களப்பணியாளர் சங்க பொதுச் செயலாளர் சந்திரசேகரன், அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் விஜயரங்கன், ஐஎன்டியுசி சங்க பொதுச் செயலாளர் சேவியர், ஜனதா சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், ஐக்கிய சங்க பொருளாளர் ஜெயப்பிரகாஷ், இஞ்சினியர் சங்க பொதுச் செயலாளர் சம்பத் குமார், பொறியாளர் கழக தலைவர் அப்பர் சாமி, என்எல்ஓ சங்க பொருளாளர் ஹரிராம், பிஎம்எஸ் சங்க தலைவர் சந்திரன், கார்டு பில்லிங் யூனியன் தலைவர் டி.ரத்தினவேலு, அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் சாமி, இஞ்சினியர் யூனியன் தலைவர் பொன்னம்பலவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள், ஒட்டுமொத்தமாக கேரள மக்களுக்கு தமது ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், தங்களது ஒரு நாள் ஊதியத் தொகையான ரூ.18 கோடியை தமிழக மின்வாரிய நிர்வாகமே பிடித்தம் செய்து, மின்சாரத்துறை அமைச்சர் முன்னிலையில், தமிழக முதல்வர் ஒப்புதலோடு கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கேட்டுக் கொள்ள முடிவு செய்யப்ப'
ட்டது.;
No comments:
Post a Comment