பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் முடிவு


            அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, அமலில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை, மீண்டும் அமல்படுத்துவேன் என, முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த முடிவு எடுத்துள்ளனர். இன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆரம்பிக்கும் போராட்டத்தை, முதல்வரின் தொகுதியான, ஸ்ரீரங்கத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை, அகவிலைப்படி உயரும் போது எல்லாம், ஓய்வூதியதாரர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர் இறந்தால், அவரது குடும்பஉறுப்பினர்களுக்கு, பாதி ஓய்வூதியம் என, பல்வேறு சலுகைகள் உள்ளன.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், இது எதுவுமே இல்லாததால், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்என்பது, அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை.கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, சென்னையில் ஜெயலலிதா முடித்தபோது, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என, தெரிவித்திருந்தார்.இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, அரசு ஊழியர், ஆசிரியர்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டசபை கூட்டத்தொடர் துவங்கி இருப்பதால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

               தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கூட்டமைப்பு, 10க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட தலைநகரங்களில், வரிசையாக உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த, முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் நகரில், இன்று உண்ணாவிரதப் போராட்டத் தைநடத்துகின்றனர். இதைத் தொடர்ந்து, வரிசையாக, ஒவ்வொரு மாவட்டமாக, உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் எனவும், இறுதியில், முதல்வரின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தை முடிப்போம் எனவும், சங்க பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில், இதுவரை, 56 ஆசிரியர்கள், பணிக் காலத்தில் இறந்துள்ளனர். 200க்கும் அதிகமான ஆசிரியர்கள், ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களில், எந்த ஒரு குடும்பத்திற்கும், ஒரு பைசா கூட கிடைக்கவில்லை.எங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி தொகை ஆகியவற்றில், 10 சதவீதம், பங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
              இதில், அரசு பங்களிப்பும் சேர்த்து, மொத்த தொகைக்கு, 8 சதவீத வட்டி வழங்க வேண்டும்.ஆனால், எங்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை, எங்கே இருக்கிறது, எவ்வளவு பிடித்திருக்கின்றனர், தற்போது எவ்வளவு பணம், கணக்கில் சேர்ந்துள்ளது என, எந்த விவரங்களும் தெரியாது.பல குழப்பங்களும், குளறுபடிகளும் நிறைந்த, பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்தால், அனைத்து பிரச்னைகளும் தீரும்.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.

1 comment:

krishnamoorthymoorthy said...

MINSARA THURAI....OOLIYARKALUM...OLD..PENSION.SCHEME..VENDI..VARUM...FEB.20&21..ILL..TAMILAGA..MINSARA..THURAI...STHAMBIKKUM..VAKAIYIL..AALUM..KATCHI..SANGA..RATHATHI..RATHANGALAIYUM...INAITHUKKONDU...PORADA..THAYARAGA..VENDUM.....KRISHNAMOORTHY/GOBI..6.2.2013

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click