மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி உயர்கிறது ?


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு குறித்து அடுத்த மாதம் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. ஜனவரி மாதம் முதல் தேதியை கணக்கிட்டு இந்த 8 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

No comments: