மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 110 மெகாவாட் மின் உற்பத்தி


மேட்டூரில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடி செலவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையம் கட்டுமான பணி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் பலமுறை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று முதல் மீண்டும் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்த சோதனை ஓட்டத்தின்போது 110 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் முழு கொள்ளளவான 600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் வரை படிப்படியாக சோதனை ஓட்டத்தின் மின்உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: