மின் வாரியத்தில் காலி பணியிடங்களால் நெருக்கடி தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு அமர்த்த திட்டம் (தினமலர் செய்தி)


திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், 63 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, ஓய்வு பெற்றவர்களை தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு அமர்த்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம் கோட்டங்கள் உள்ளன. தொழிற்சாலை, வணிகம், விவசாயம், வீடுகளுக்கு என ஆறு லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மின்வாரிய அலு<வலகங்களுக்கு அலுவலர்கள், பணியாளர்கள் என 3,300 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், 1,200 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். 2,100 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 596 ஒயர்மேன் பணியிடங்களில் 22 பேரே மட்டுமே <உள்ளனர். "ரீடிங்' எடுத்து, கட்டணம் வசூலிக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட 224 பணியிடங்களில், 114 பேர் மட்டுமே உள்ளனர்.


வணிக ஆய்வாளர் பணி, அலுவலர்கள், டைப்பிங் என அலுவலக பணி மேற்கொள்ளும் அலுவலர்கள் பணியிடம் பெரும்பாலும் காலியாகவே உள்ளன. இதனால், அலுவலகங்களில் பணிகள் தேங்குவதோடு, மின் கட்டணம் வசூல் செய்யவும், ரீடிங் எடுத்தல், இணைப்புகளுக்கு மதிப்பீடு தயாரித்தல் என பல்வேறு பணிகளும் பாதிக்கின்றன. இதனால், நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, மின் கட்டண வருவாயும் கடுமையாக பாதித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஓய்வு பெற்ற மின் பணியாளர்களை, தினக்கூலி அடிப்படையில் நியமிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா கூறுகையில், ""மின் கட்டணம் வசூலித்தல், ரீடிங் எடுத்தல், மதிப்பீடு தயார் செய்தல், டைப் ரைட்டிங் உள்ளிட்ட அலுவலக பணிகள் மேற்கொள்ள போதிய பணியாளர்கள் இல்லாததால், மின் பகிர்மான கழக வருவாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவைப்படும்போது, தினக்கூலி அடிப்படையில், ஓய்வு பெற்ற அலுவலர்களை பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளலாம் என விதி உள்ளது. அதன்படி, விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. உயரதிகாரிகள் அனுமதி பெற்று, அவர் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவர். ஒவ்வொரு பணிக்கும், மின் பகிர்மான கழகம் நிர்ணயித்துள்ள தினக்கூலி வழங்கப்படும்,'' என்றார்.

2 comments:

Balasubramanian Ramachandran said...

there is a court judgement that the tneb should not adopt contract labour system for the permanant and perenial nature of duties.when such judgement is existing how the daily wages workers will be used for the boards works. balu/cotee/udumalpet

Balasubramanian Ramachandran said...

there is a court judgement that the tneb should not adopt contract labour system for the permanant and perenial nature of duties.when such judgement is existing how the daily wages workers will be used for the boards works. balu/cotee/udumalpet

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click