பி.எப்., சந்தாதாரர்களுக்கு இ - பாஸ்புக் அறிமுகம்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், தங்கள் கணக்கு விவரங்களை, ஆன்-லைனில் தெரிந்து கொள்ளும் வகையில், இ-பாஸ்புக் சேவை, நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களுக்கு, அவர்களது கணக்கில் சேர்ந்துள்ள, சந்தா மற்றும் வட்டி விவரங்கள் அடங்கிய ரசீது, ஆண்டுதோறும் வழங்கப்பட்டது. இதை, மின்னணு ரசீதாக பார்க்கும் வசதி, இணையதளம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு சந்தாதாரரும், தங்கள் மாதாந்திரா கணக்கு விவரங்கள் அடங்கிய, மின்னணு ரசீதை, இ.பி.எப்., இணையதளத்தில் பார்க்க, வசதி செய்யப்பட்டு இருந்தது.

தற்போது, இந்த கணக்கு விவரங்களை, மாதாந்தோறும் டவுன்லோடு செய்து கொள்ளும், இ-பாஸ்புக் வசதியை, மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர், ஆர்.சி.மிஸ்ரா, நேற்று துவக்கி வைத்தார். இந்த வசதியைwww.epfindia.gov.in இணையதளத்தில் பெறலாம்.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ள சந்தாதாரர்கள், இந்த இணையதளத்தில், தங்களது போட்டோவுடன் கூடிய அடையாள எண் உள்ள, பான்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை பதிவு செய்து கொள்ள வேண்டும். பாஸ்வேர்டாக, மொபைல் போன் எண்ணை பதிய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்த பிறகு, தங்கள் கணக்கு எண்ணை செலுத்தி, பாஸ்புக்கை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click