பெரம்பலூரில் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்


பெரம்பலூர், டிச.16-
 
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகில் மின் வாரித்திற்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
 
அரியலூர் எம்.எல்.ஏ. துரை.மணி வேல் முன்னிலையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச் செல்வன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகையில், தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிட முதல்-அமைச்சர் தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
 
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டை சீர்செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சார பற்றாக்குறை வெகு விரைவில் சீராகும். மின்சார மிகை மாநிலமாக தமிழ்நாடு உருவாகும். முதல்-அமைச்சரின் முயற்சிகளுக்கு அரசு அலுவலர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments: